+1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
பிளஸ்-1 பொது தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ்-2வின் ஒரு பாடத்திற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அவர்கள் செய்திகள் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் பேசியவாறு தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in இந்த இணையதளங்களின் வழியே மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பள்ளியில் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு தேர்வுமுடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதியும், மதிப்பெண் பட்டியலை வழங்கும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அவர்கள் கூறியுள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் ஊரடங்கு காரணமாக ஒரு பாடம் மட்டும் சில மாணவர்கள் எழுதியும்,பல மாணவர்கள் எழுதாமலும்போகும் நிலை ஏற்பட்டது.இந்த விடுபட்ட தேர்வினை கடந்த 27ஆம் தேதி நடத்தி ஒரே நாளில் விடைத்தாள் திருத்தும் பணியும் முடிவடைந்து தற்போது இந்த தேர்வின் முடிவுகளைத்தான் நாளை வெளியிடுவதாக தேர்வுத்துறை இயக்கம் குறிப்பிட்டுள்ளது.