பிற்படுத்தப்பட்டோருக்கான கடன் திட்டம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

0
79

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மூலம் வெளிவந்துள்ள புதிய செய்தி தகவல்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதாரம் முன்னேறுவதற்காக சில கடன் திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது.

இந்த கடன் திட்டத்தின் மூலம் பயனடைய சில விதிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளன. முதலில் இத்திட்டத்தில் மூலம் பயன்பெற விரும்புவோரின் குடும்பஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறையாமல் இருக்கவேண்டும். மேலும், விண்ணப்பத்தாரின் வயது 18 முதல் 60 வரை இருக்கவேண்டும். அத்தோடு சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் முழுமையாக நிறைவடைந்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ், தனிநபருக்கு கடன் அதிகபட்சமாக ரூ.5 லட்சமும், சிறுகடனாக அதிகபட்சமாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும். அதேபோன்று, சுயஉதவிக் குழுவுக்கு ஒரு நபருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ஒரு குழுவுக்கு ரூ.15 லட்சம், கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருவள்ளூரில் உள்ளகூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், அனைத்துநகர கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளிளும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பயன் பெறலாம்.

author avatar
Parthipan K