புத்தர் போனவுடன் புத்தரின் மனைவி என்ன ஆனாள்? – தினம் ஒரு சிறுகதை

0
319

புத்தர் போனவுடன் புத்தரின் மனைவி என்ன ஆனாள்? – தினம் ஒரு சிறுகதை

புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
அதன்பின் அவர் தன் குடும்பத்தை பார்க்க செல்கிறார்.
அங்கு நடந்தவை ஒரு சிறுகதையாக

புத்தரின் மனைவி கேட்கிறாள்:
நீங்கள் என்னை விட்டு போனீர்கள்? நான் அதில் தவறு சொல்ல மாட்டேன் ஆ.என்னிடம் சொல்லி விட்டுப் போய் இருக்கலாம் அல்லவா? என்று அவள் கேட்கிறாள்.
நீங்கள் என்னை நம்பாமல் போனது தான் என்னை இத்தனை காலம் சாக அடித்தது என்று அவள் வினவுகிறாள்.

ஏன் என்னை இவ்வளவு தூரம் காயப்படுத்துனீர்கள்? என்று அவள் கேட்க
அதற்கு புத்தர் நான் பயந்தது உன்னால் அல்ல என்னால் தான் என்று கூறுகிறார்.

நான் மனைவி மற்றும் மகனின் முகத்தை பார்த்தால் இங்கேயே தங்கி விடுவேன் என்று பயந்துதான் நான் அரண்மனையை விட்டு சென்று விட்டேன் என்று அவர் பதில் கூறுகிறார்.

அடுத்தது அவரது மனைவி ஒரு கேள்வி கேட்கிறாள்.
நீங்கள் இந்த அரண்மனையை விட்டு செல்லாமல் இருந்திருந்தால் உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்காதா? என்று அவர் வினவுகிறாள்.
அதற்கு புத்தர் நிச்சயமாக இல்லை இடம் ஒரு பொருட்டே அல்ல நான் எங்கு இருந்து இருந்தாலும் எனக்கு அந்த ஞானம் கிடைத்தே தீரும் என்பது தான் விதி என்கிறார்.

புத்தரைப் பற்றி பெருமையாகப் பேசும் நாம் அவரது மனைவி மற்றும் மகனின் நிலையை இதுவரை அறிந்ததில்லை அவரது மனைவியின் தியாகத்தை போற்றியது இல்லை.

புத்தரின் மனைவியின் பெயர் யசோதரா.
அன்று எதுவும் சொல்லாமல் அரண்மனையை விட்டு வெளியேறிய கணவனை எவ்விடம் சென்றார் என்று தெரியாமல் அவளும் வெளியேறி இருந்தால் இந்த நாடு என்னும் நாட்டு மக்கள் அவளை ஏற்றுக் கொண்டிருப்பார்களா? என்னவெல்லாம் தூற்றி இருப்பார்கள்.
அதன்பின் அவள் எவ்வளவு போராடி இருப்பாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும் அந்தச் சிறுவயதிலேயே கணவன் தன்னை விட்டு எந்த காரணம் இன்றியும் சென்றதை எவ்வாறு அவள் மற்றவரிடம் கூறுவாள். அவளுக்கு ஒரே ஒரு மகன் பெயர் ராகுலன் அவனையும் வைத்துக்கொண்டு அவள் எப்படி எல்லாம் போராடி இருப்பாள் ஆனால் அவளின் தியாகத்தை கூறும் அளவிற்கு நாம் புத்திசாலிகளே அல்ல.
புத்தர் போனபின் யசோதரா தனது தலைமுடியை மழித்துக் கொண்டாள் .அதன் பின் தன் ஆடையை அலங்கோலமாகி கொண்டாள்.

அப்பா எங்கே?என்று கேட்கும் மகனுக்கு பதில் சொல்ல இயலாமல் அவனையும் வளர்க்க போராடியிருக்கிறாரள்.

புத்தன் அனைத்தையும் இழந்து துறவியானான். ஆனால் யசோதரா அனைத்தையும் கண்முன் வைத்துக்கொண்டே துறவியாக வாழ்ந்தாள்.

Previous articleஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்!
Next articleபிறந்தநாள் கொண்டாடும் பொம்மாயி!