பாட்டியே தனது இரண்டு பேத்திகளையும் கொன்ற சம்பவம்: கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்!

0
131

கள்ளக்குறிச்சி அருகே பாட்டியே தனது இரண்டு பேத்திகளையும் கிணற்றில் தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். இவருடன் மனைவி கீர்த்தனா மற்றும் இரண்டு மகள்கள் அமுதினி (வயது 2), ரிஷிகா (வயது 4) உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ‌தான் தனது மாமியார் வீடான தியாகதுருகத்திற்கு தனது பிள்ளைகளையும் மனைவியையும் திருஞானசம்பந்தம் அழைத்து சென்றுள்ளார். மூன்று நாட்களுக்கு மேலாக மாமியார் வீட்டில் இருந்த நிலையில் நேற்று இரவு எல்லோரும் உணவு அருந்திவிட்டுவ உறங்கச்சென்றனர்.

அதிகாலை ஒரு 3:00 மணி அளவில் கீர்த்தனா எழுந்து பார்த்தபோது தனது அதுவே உறங்கிக்கொண்டிருந்த 2 பெண் பிள்ளைகளையும் காணவில்லை. பதறிப்போன அவர் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் இருவரும் அலறியடித்துக்கொண்டு பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் சிறுமிகள் இருவரும் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

கீர்த்தனாவின் தாயார் வள்ளியம்மாள் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். கீர்த்தனாவிற்கு தனது தாயார் மீது சந்தேகம் எழுந்தது. சற்றும் யோசிக்காமல் தனது தாயாரை அடித்து கேட்டபோது அவர் கிணற்று பக்கம் கை காட்டியுள்ளார். அதன்பின்
இன்று காலை 7 மணி அளவில் உதயமாம்பட்டு செல்லும் சாலையில் உள்ள பலராமன் என்பவரது விவசாய கிணற்றில் சந்தேகத்தின் அடிப்படையில் ஊர் மக்கள் உதவியுடன் சிறுமிகள் இருவரையும் தேடி பார்த்துள்ளனர்.

கிணற்றில் தண்ணீரின் ஆழம் அதிகமாக இருப்பதால் சிறுமிகளை தேடுவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்த்தனர். அதனடிப்படையில் தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் மற்றும் அவருடன் தீயணைப்பு வீரர்கள் 7 பேர் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் ரிஷிகா (வயது 4) மற்றும் அமுதினி (வயது 2) ஆகிய இரண்டு சிறுமிகளின் சடலத்தை மீட்டனர்.

அதன்பின் தியாகதுருகம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று இரண்டு சிறுமிகளின் உடலையும் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து தியாகதுருகம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு சிறுமிகளின் உடலையும் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன்பின் சிறுமிகளின் பாட்டி வள்ளியம்மை மற்றும் தந்தை திருஞானசம்பந்தம் தாயார் கீர்த்தனா ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் மனநலம் பாதிக்கப்பட்ட வள்ளியம்மை தான் தனது இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தியாகதுருகம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபிரபல நிறுவனங்களுக்கு அமெரிக்கா சரமாரி கேள்வி
Next articleதங்க விலை இம்புட்டு விக்கிறதுக்கு காரணம் என்ன தெரியுமா?