மத்திய பிஜேபி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையை தான் ஆதரிப்பதாக காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், காங்கிரசிற்கு நான் “தலைமை எதுவாயினும் அதற்கு நான் தலையாட்டும் பொம்மை அல்ல, எனக்கு சரியென்று மனதில் பட்டதை வெளிப்படையாக நான் பேசுகிறேன். இதற்காக நான் பிஜேபியை ஆதரிக்கவில்லை” என நேற்று ட்விட்டரில் அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
34 ஆண்டுகள் கழித்து தேசிய புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை தமிழகம் முழுமையாக எதிர்த்த மும்மொழிக் கொள்கையை இதில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பல்வேறு கட்சிகள் எதிர்த்து வரும் நிலையில், எதிர்க் கட்சியில் உள்ள குஷ்பு வெளியிட்ட அறிக்கையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து சுதந்திரம் உண்டு எனவும், கட்சியில் மாற்றுக் கருத்து தெரிவித்தால் அதனை ஏற்றுக் கொள்ளவும் செய்வோம். ஆனால், பொதுவெளியில் இதுபோன்ற அமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிடுவது தவறானதாகும்.

வேறு ஏதோ லாபத்திற்காக செயல்படுவதாகவும் இருக்கிறது. இதை பொதுவெளியில் கூறுவது கட்சியில் உள்ளத்தின் வெளிப்பாடு எனவும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களே இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். ஜனநாயகத்தின் ஆதிக்க சக்திகளை மீண்டும் இதில் அதிகாரத்தை கைப்பற்ற இந்தப் புதிய கல்விக் கொள்கை ஏதுவாக இருக்கிறது. மேலும் இது கொரோனா காலத்தில் கொண்டுவந்தது மிகப்பெரிய தவறாகும்” என அவர் காட்டம் தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.