கொரோனா தடுப்பு பணியாளர்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவுப் பொருட்கள் ஏற்றி வந்து விநியோகம் செய்த கோர சம்பவம்.
சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியின் 14வது வார்டில் கொரோனாத் தடுப்புப் பணிக்காக களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வேலையில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்காக உணவு தயாரித்து எடுத்துச்செல்ல வாகனம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால், குப்பை வண்டியிலேயே ஏற்றி வந்து உணவை வினியோகம் செய்தனர்.
இந்த உணவினை விநியோகம் செய்யும் நபர்களும் முக கவசம் எதுவும் அணியாமலும், சுகாதாரமற்ற முறையில் உணவுகளைத் தயாரித்து கொடுப்பதாகவும் தெரியவந்தது. மேலும் ஏற்கனவே இதுகுறித்து, மாநகராட்சியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தரமான முறையிலும் உணவு வழங்குவதாகவும், கடைநிலையில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தடுப்பு பணியாளர்களுக்கு மட்டும் இதுபோன்ற சுகாதாரம் மற்றும் முறையிலும் உணவு வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.
இந்த செய்திகளின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கினை பதிவு செய்துகொண்டு விசாரணை நடத்தியது. விசாரணையை ஏற்றுக்கொண்ட மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் கூறியதாவது, இன்னும் மூன்று வாரத்திற்குள் சென்னை மாநகராட்சி ஆணையர் இது குறித்து விரிவான அறிக்கையில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.