15-கும் மேற்பட்ட கால்நடைகள் மர்ம சாவு ! கதறும் விவசாயிகள்!

0
63

15-கும் மேற்பட்ட கால்நடைகள் மர்ம சாவு கதறும் விவசாயிகள்.

திட்டக்குடி அருகே மர்மமான முறையில் பத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளது .அந்தப் பகுதி விவசாயிகளை பயங்கரமான துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபகாலமாக நல்ல மழை பெய்து வருகிறது மானாவாரி விவசாய நிலங்களை சுத்தப்படுத்தி பயிர் விளைவிப்பதற்காக மாடுகளை தயார் செய்து வருகின்றனர் விவசாயிகள். அந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தேறிய உள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஐவநூர், கொரக்கை, தி.ஏந்தல், வெங்கனூர் ஆகிய கிராமங்களில் பதினைந்திற்கும் மேற்பட்ட ஆடு,மாடுகள் மர்மமான முறையில் இறந்து இருப்பதால் அங்குள்ள விவசாயிகள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த மர்மமான சாவைப்பற்றி விவசாயிகளிடம் கேட்கும் பொழுது அவர்கள் கூறியதாவது,

இதற்கு காரணமாக விவசாயிகள் அங்கு உள்ள பல ஏக்கர் நிலங்களில் புதர் போன்று வளர்ந்து இருக்கும் செடி கொடிகளை அளிப்பதற்காக களைக் கொல்லிகளை பயன்படுத்தி இருந்தோம் அதனால் மேய்ச்சலுக்குச் சென்று வரும் ஆடு மாடுகள் அந்த இலைகளை உன்று இருக்கலாம். அதனால் இறந்து இருக்கலாம் என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 

இதனால் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு இந்த பகுதியை ஆய்வு செய்யுமாறு பொதுமக்களும் விவசாயிகளும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆடு மாடுகளை தன் பிள்ளைகளைப் போல வளர்த்து வரும் விவசாயிகளுக்கு அவை இறந்து கிடப்பது மனதை உருக்கும் விஷயமே.