ஊரடங்கினை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள்

0
157

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகில் பல்வேறு நாடுகளிலும் முழுவதுமாக பொது முடக்கம் கொண்டுவந்துள்ளது. அதனை எதிர்த்து வீதிகளில் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லின் மாகாணத்தில் ஊரடங்கினை எதிர்த்து வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, கருணா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டத்தில் நாங்கள் சுதந்திரமான மனிதர்கள் என எழுதிய வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி மக்கள், “நாங்கள் குரல் எழுப்புகிறோம் ஏனெனில் நீங்கள் எங்களது சுதந்திரத்தினைப் பறிக்கிறீர்கள்” என்று கோஷங்கள் இட்டும் ஜனநாயகத்தை திருப்பித் தரவேண்டும் என்றும் முழக்கமிட்டபடி மக்கள் பொதுவெளியில் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் முகக் கவசம் அணியவில்லை. ஜெர்மனியில் கடந்த மே 30ஆம் தேதி முதல் எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

ஜெர்மனியில் 8.3 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தற்போது ஜெர்மனியில் கொரோனா தொற்று குறைந்திருப்பதால் கடைகள், பள்ளிகள், விடுதிகள், உணவகங்கள் என படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. இதில் பொது வெளியில் நடமாடும் மக்கள் பொது இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஜெர்மனியில் பொது முடக்கத்தால் பொருளாதாரம் இழந்து வரும் நிலையில், தற்போது அதனை மீட்டெடுக்கும் வகையில் சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளதால் மீண்டும் கொரோனா பரவல் உயர்ந்ததால் அந்தப் பகுதிகளில் மட்டும் பொது முடக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

Previous articleயாருடா இது? ஷாஜஹான் பட ஹீரோயினா? வாயைப் பிளந்த ரசிகர்கள்!
Next articleவேலை கொடுப்பவருக்குத் தான் புதியகல்விக்கொள்கை திட்டம் – பிரதமர் மோடி: வேலை தேடுபவருக்கு இல்லையா?