முகக்கவசத்தில் வெட்டிவேர் மற்றும் ப்ளூடூத்!

0
118

இந்த முகக்கவசம் அணிவதால் மூச்சுத்திணறல் வராது மற்றும் நறுமணம் வீசும். மேலும், செல்போனிலும் எளிதாக பேசலாம்.

விருதுநகர்: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரிதும் பரவி வருகிறது. கொரோணா தொற்று மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயமாகி விட்டது. தற்போது முகக்கவசம் தயாரிப்பது ஒரு தொழிலாகவே மாறி விட்டது. ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் முகக்கவசம் தயாரிப்பில் களம் இறங்கியிருக்கிறது. இதனால் தற்போது சாதாரணமாக தெருவில் உள்ள கடைகளிலேயே முகக்கவசங்கள் ரூ.10 முதல் ரூ.50 வரை விதவிதமாக வரிசை கட்டி தொங்குகிறது.

இதில் தனித்துவத்தை காட்டும் வகையில் வாசனை, மூலிகை வேர் கலந்த முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. முகக்கவசம் அணிவதால் சிலருக்கு சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. முகக்கவசம் அணிவதால் வாயை முழுமையாக மூடிவிடும், இதனால் சாதாரணமாக பேசுவது கூட எதிரில் நிற்பவர்களுக்கு தெளிவாக கேட்காது. அதேபோல் செல்போனில் பேசுவதற்கும் சற்று சிரமமாகவே இருக்கும்.

மூச்சுத்திணறலை தடுக்க ‘வெட்டிவேர்’ மற்றும் செல்போனில் சிரமமின்றி பேச ‘அல்ட்ரா மாடல் ப்ளூடூத்’ஐ முகக்கவசத்தில் இணைத்து புதுமையாக தயாரித்து வருகிறார் நாகராஜன். விருதுநகர் அருகே குந்தலப்பட்டியை சேர்ந்த இவர் இயற்கையையும் நவீனத்தையும் இணைத்து புது வகையான முகக்கவசங்களை தயாரித்து வருகிறார். இந்த முகக்கவசம் இரண்டும் மடிப்பாக தைக்கப்படுகிறது. இதன் நடுவில் 5 கிராம் வெட்டி வேரை நிரப்பி துணியில் சொருகி விடுகிறார். அத்துடன் நடுவில் உள்ள மடிப்பில் ப்ளுடூத்தை இணைத்து தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளார். இதனை வாடிக்கையாளர் சக்திக்கேற்ப ரூ.300 முதல் ரூ.1,500 வரை விற்று வருவதாகக் கூறுகிறார்.

Previous article100 கொலைகள் செய்து கிட்னியை திருடிவிட்டு உடல்களை முதலைகளுக்கு இரையாகப் போட்ட மருத்துவர்!!
Next articleநாஞ்சில் விஜய்யுடன் சுள்ளான் சூர்யா தேவி அடிக்கும் லூட்டி…புகைப்படங்களை வெளியிட்ட வனிதா!