தமிழச்சினா சும்மாவா!!தமிழ் பெண்கள் செய்த வீரச்செயல் குவியும் பாராட்டுக்கள்!!

0
317

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டி என்ற கிராமத்தை சேர்த்த மாடசாமி என்பவர் ,தனது பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டார். இவர் தனது பசுமாட்டை கிணற்றின் அருகே மேய்ச்சலுக்காக காட்டிவைத்து போது, மாடு திடீரென கிணற்றில் தவறி விழுந்தது.மாடு விழுவதைக் கண்ட மாடசாமியின் மனைவி புவனேஸ்வரி பசு மாட்டினை மீட்க சிறிதும் அச்சமின்றி கிணற்றுக்குள் குதித்தார்.

கிணற்றில் பசு மாட்டை மீட்கும் முயற்சியிலும்,காப்பாற்ற அக்கம்பக்கத்தினரை கூச்சலட்டு அழைத்துக் கொண்டும் புவனேஸ்வரி கிணற்றுக்குள் இருந்தார்.புவனேஸ்வரியின் குரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

பசுமாட்டை காப்பாற்றுவதற்காக  70 அடி ஆலக் கிணற்றில் இருந்து புவனேஸ்வரியை கண்ட அவர்களது தோழி சுதா என்பவர், சற்றும் சிந்திக்காமல் கிணற்றில் குதித்தார்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறை அலுவலர்கள் கிணற்றுக்குள் இறங்கி தவித்துக் கொண்டிருந்த இரு பெண்களையும் ,பசு மாட்டையும் பத்திரமாக மீட்டனர்.சிறிதும் அச்சமின்றி கிணற்றுக்குள் குதித்த இரு பெண்களை, அவ்வூர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.இந்த செயல் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Previous articleஆன்லைன் மூலம் இரண்டரை லட்சம் கொள்ளை:அதிர்ச்சியில் பொதுமக்கள்
Next articleகோவை மாணவியை பாராட்டிய பிரதமர்!!