தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்படும் பாஜக தலைவர்கள்: இதிலும் அரசியல் செய்கிறார்களா?

0
109

 

 

 

கரோனாவால் பாதிக்கப்பட்டதாக பாஜக தலைவர்கள் தொடர்ந்து அறிக்கைகள் விட்டு தனிமைப் படுத்தி இருக்கின்றனர்.

 

 

  • மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று தனது ட்விட்டர் பதிவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், என்னைத் தொடர்பு கொண்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கூறியிருந்தார். இதன்பிறகு சிறிது நேரத்தில் உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் தனக்கும் கரோனாத் தொற்று உறுதியாக உள்ளது. அதனால் என்னைத் தொடர்பு கொண்டவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

மேலும் கர்நாடக மாநிலம் பாஜக முதலமைச்சராக இருக்கும் எடியூரப்பாவும் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய உடல் நிலை தேறி வருவதாகவும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், நேற்று தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகிததுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

Previous articleஉலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம்! பணிகள் தீவிரம்
Next articleதிராவிட கழகத்தினரை தெரிக்கவிட்ட ஆவணி அவிட்டம்! பாரம்பரியத்தை மீட்கும் வன்னியர்கள் பூணூல் அணியும் விழா