தனியார் ரயில்களுக்கான கட்டண சேவை குறித்து முக்கிய தகவல்

0
112

வரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் தனியார் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.இதன் தொடக்கமாக நாட்டில் உள்ள 109 வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் ரயில்கள் இயக்குவதற்கு தகுதி தேர்வு பெற்றதாக ரயில்வே வாரியம் அண்மையில் அழைப்பு விடுத்துள்ளது.

ரயில்வே சேவையில் அரசிடம் இருந்தால் ஒரே அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டும், ஆனால் தனியாரிடம் சென்றால் கால நேரத்திற்கு ஏற்ப பயணக் கட்டணம் அதிகமாகும் என்னும் புகார் எழுந்துள்ளது.
எனவே ரயில்வே சட்டத்தின்படி நாடாளுமன்றத்தில் அனைவரும் ஒன்று கூடி தனியார் ரயில் பயண கட்டணத்திற்கான உச்சவரம்பை முன்பே அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

தனியாரிடம் ஒப்படைத்தாலும் கட்டணம் நிர்வாகம் என்பது மத்திய அரசிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் தனியார் ரயில்களுக்கு டிக்கெட் உச்சவரம்பு எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ,மாற்றாக ரயில்வே நிலைக்கு ஏற்ப எவ்வளவு வேண்டுமானாலும் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் இது குறித்த எந்த தகவல் முடிவுகளும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மக்களின் வசதிக்கேற்ப ரயிலின் சேவை, பயனாளர்களின் வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் தனியார் ரயில்களின் வேகம் மற்றும் விபத்து காலத்தில் இழப்பீடு போன்ற விதிமுறைகள் வகுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Previous articleஅடேங்கப்பா ‘தல அஜித்’ திரையுலகிற்கு வரப்பிரசாதமாக கிடைத்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டதா?தல ரசிகர்களுக்காக common dp உள்ளே!!
Next articleRTPCR டெஸ்டில் முதலில் கரோனா தொற்று நெகடிவ் வந்து பிறகு பாசிடிவ் வருவது ஏன்?