தமிழகத்தில் மும்மொழி கல்விக்கொள்கையை பின்பற்ற இயலாது! மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

0
98

தமிழகத்தில் மும்மொழி கொள்கை இல்லை- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை பற்றியே பேசி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தியது.நாடெங்கும் அதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர்.

முக்கியமான தமிழகத்தில் திமுக போன்ற எதிர்க்கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக திமுகவும் அவரது கூட்டணி கட்சிகளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தனர். அதில் இந்த புதிய மொழி கல்வி கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அன்பழகன் செங்கோட்டையன் போன்ற கட்சி தரப்பினரும் பங்கேற்றனர். மேலும் பல்வேறு அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர். அதில் புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள், எதிர்க்கட்சியின் தரப்பினரின் கடிதங்கள் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று அனைத்து விஷயங்களைப் பற்றியும் விவாதித்துள்ளனர்.

அதன் பிறகு தற்போது தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் எக்காரணத்தை கொண்டும் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அனுமதிக்கப்படாது. இந்த புதிய கல்விக் கொள்கை முடிவை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் மத்திய அரசு மும்மொழி கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தி இருந்தாலும் மாண்புமிகு அம்மாவின் தமிழக அரசானது இருமொழிக் கொள்கையை பின்பற்றும். மும்மொழிக் கொள்கையை பின்பற்றாது என்று எழுதியுள்ளார்.

Previous articleமுதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மரு.ராமதாஸ் டுவிட்!
Next articleகட்டப்பா மகள் இயக்கவிருக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?