அந்நிய செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்: RBI புள்ளிவிவரம்!!

Photo of author

By Parthipan K

நாட்டின் அந்நிய  செலாவணி கையிருப்பு  52,263 கோடி டாலர்( ரூ.39.19 லட்சம் கோடி) என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது

இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறியதாவது: இந்தியாவின் அந்நிய  செலாவணி கையிருப்பு ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 499 கோடி டாலர் அதிகரித்து,52,263 கோடி டாலரை எட்டியுள்ளது.

இது முன்னெப்போதும் கண்டிராத உச்சபட்ச நிலையாகும். கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கணிசமாக உயர்ந்தது நாட்டின் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை தொட பெரிதும் உதவிகரமாக இருந்தது.

இதற்கு முந்தைய வாரத்தில் ஒட்டுமொத்த செலாவணி கையிருப்பு127 கோடி டாலர் உயர்ந்து 51,764 கோடி டாலராக காணப்பட்டது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ஜூன் 5ம் தேதியுடன் முடிவடைந்த  வாரத்தில் தான் முதல் முறையாக அரை பில்லியன் டாலரை தாண்டிய சாதனை படைத்தது என்று குறிப்பிடத்தக்கது.

மேலும் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு136 கோடி டாலர் அதிகரித்து 3,610 கோடி டாலரை எட்டியது.

சர்வதேச நிதியத்தின் 90 லட்சம் டாலர் உயர்ந்து 146 கோடி டாலராகும். நாட்டின் கையிருப்பு நிலை 2.5 அதிகரித்து 458 கோடி டாலராக இருந்தது என ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.