நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கும் சூரணம்!

0
191

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கும் சூரணம்!

நெல்லிக்காய்,கடுக்காய் ,தான்றிக்காய் இந்த மூன்று பொருளையும் நன்கு காயவைத்து இடித்து பொடி செய்து கொண்டு இந்த பொடியை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு அருகில் நோய் அண்டாது.

தயாரிக்கும் முறை:

நெல்லிக்காய்- 4 பங்கு, தான்றிக்காய் -2 பங்கு, கடுக்காய் -1 பங்கு அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மூன்றையும் வெயிலில் உலர்த்தி நெல்லிக்காய் மற்றும் கடுக்காயின் விதைகளை நீக்கி உலர்த்தி வைத்து,அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியின் பெயர்தான் திரிபலா சூரணம்.

சாப்பிடும் முறை:
தினமும் காலையில் திரிபலா சூரணத்தை ஒரு ஸ்பூன் எடுத்து சுடுநீரில் கலந்து குடித்துவர நோய்கள் அருகில் அண்டாது. சூரணத்தை குடித்த அரை மணி நேரத்திற்கு வேறு எந்த ஆகாரமும் உண்ணக் கூடாது.
குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும். பெரியவர்கள் சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். இதை எந்த காலத்திலும் பயன்படுத்தலாம்.ஆனால் உரிய முறையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதின் பலன்கள்:

1.உடலின் உள்ளுறுப்புகளுக்கு சென்று வைரஸை தாக்கி போராடுகிறது.எந்தவித சிறிய கிருமி முதல் பெரிய புற்று நோய்க் கிருமி வரை இந்த திரிபலா சூரணம் அழித்து விடுகிறது.
2. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன.
3. செரிமானக் கோளாறால் ஒரு சில பேர் பாதிக்கப்படுவார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இந்த திரிபலா சூரணத்தை மூன்று வேளையும் எடுத்துக்கொள்ளும் பொழுது செரிமான கோளாறுகள் நீங்கிவிடும்.
4. குடலை சுத்தம் செய்வதுடன் மலச்சிக்கலை தீர்க்கிறது மற்றும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்த ஓட்டத்தை சீராக அமைகின்றது.
5. திரிபலா சூரணத்தை சாப்பிடும் போது ஒரு கசப்புத்தன்மை இருக்கும் அந்த கசப்புத்தன்மை நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
6. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் திரிபலா சூரணத்தை சாப்பிடும் பொழுது உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்கிறது.

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கும் சூரணம்!

Previous articleவெளியாகிறது தளபதியின் 64-வது படம்: அமேசான் பிரைம் தகவலால் அதிர்ந்துபோன படக்குழுவினர்.
Next articleநான்காவது இடத்தில் ரஷ்யா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here