கந்த சஷ்டி கவசம் தொடர்பாக பேசியவர்களை கண்டிக்க வேண்டும் எனவும், திமுகவில் உட்கட்சி தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை டெல்லியில் இருந்தவாறு அவர் ஸ்டாலினிடம் பேசியுள்ளார்.
இவர் பாஜகவில் இணைய போவதாக காலையிலிருந்தே பரபரப்பான விவாதங்கள் குழப்பங்கள் நிலவின. அவர் டெல்லிக்குச் சென்று பாஜகவின் மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்துள்ளார். அவருடன் தமிழக பாஜக தலைவர் முருகன் மற்றும் முரளிதர ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதன் அடிப்படையில் அவர் பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தான் பாஜகவில் இணைய போவதில்லை என்றும், அயோத்தியில் ராமர் கோவில் பூஜைக்கு செல்லவிருக்கும் பிரதமருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், மேலும், தனது ஆயிரம் விளக்கு தொகுதியில் 2 மின்தூக்கி (லிப்ட்) அமைத்துத் தருவதற்கு கோரிக்கை வைப்பதற்காக பியூஸ் கோயலை சந்திக்க இருந்ததாகவும், வழியில் ஜேபி நட்டாவைை சந்திக்க நேர்ந்தது என அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பிறகு அவர் பாஜகவின் ஆட்சியினையும், நரேந்திர மோடியின் ஆட்சியினைப் பற்றியும் புகழ்ந்துள்ளார். மேலும் அவர், திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் எனவும் திமுகவின் கட்சிகளிலிருந்து கொண்டே பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். இதனால் உட் கட்சிக்குள் பூசல்கள் ஏற்பட்டதுடன் அவரை தலைமை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளதால், அவர் தற்போது திமுகவில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவருகிறது.
யார் இந்த கு.க செல்வம்?
இதனடிப்படையில், கு.கசெல்வத்தைப் பற்றி சவுக்கு தளத்தில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் இங்கு கூறப்பட்டுள்ளது.
“கடந்த 2019 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக வளர்மதியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவர் கு.க. செல்வம்.
அதிமுகவில் வளர்மதி என்றால், திமுகவில் கு.க.செல்வம்.
இந்த கு.க செல்வமும், வளர்மதியும், அதிமுக ஜெயலலிதா ஜானகி அணியாக பிரிந்து இருந்தபோது, ஜானகி அணியில் இருந்தவர்கள். போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வீட்டில் சாணி வீசும் போராட்டம் நடந்தபோது, சாணியை வீசியவர் வளர்மதி. அப்போது வளர்மதிக்கு இரு புறமும் தளபதியாக இருந்தவர்கள் சைதை துரைசாமி மற்றும் கு.க.செல்வம்.
இருவரும் நகமும் சதையுமாக, பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்து இருந்தவர்கள். இருப்பினும் அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் வளர்மதிக்கு எதிராகவே. கு.க செல்வம் அவர்கள் நிறுத்தப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.” இவ்வாறு அவரைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது கட்சித் தலைமை என்ன செய்யும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.