எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? இன்றைய ராசிபலன்-05.08.2020

0
196

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 05.08.2020

நாள் : 05.08.2020

தமிழ் மாதம்: ஆடி 21 புதன்கிழமை.

நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்:

மதியம் 12.00 முதல் 1.30 வரை

எம கண்டம்:

காலை 07.30 முதல் 09.00 வரை

குளிகன்:

பகல் 10.30 முதல் 12.00 வரை

திதி:

துதியை திதி இரவு 10.51 வரை அதன் பின் தேய்பிறை திரிதியை.

நட்சத்திரம்:

அவிட்டம் காலை 9.30 மணி வரை அதன் பின் சதயம்.

பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.30 வரை பின்பு சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே இன்று நீங்கள் மிகவும் தன்னம்பிக்கையுடனும் தன்னிச்சையாகவும் செயல்படுவீர்கள். புதிய வாய்ப்புகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று பணிகளை திறம்பட முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு பெருகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் பெருகும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் இன்று பொறுமையை கடைபிடியுங்கள். வீண் வாக்குவாதங்கள் வரலாம். கவனமாக பேசுங்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். அதிக பணிச்சுமை இருக்கும். பொறுமையை கடைபிடித்து செய்யுங்கள். துணையுடன் நட்பு பாராட்டுங்கள்.பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். தியானம் செய்யுளம் நாள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே இன்று பணவரவு சுமாராக வரும்.குடும்பத்தினரிடையே பிரச்சினைகள் இருந்தால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.தொழில்களில் ஒரு சில மாறுதல்கள் செய்வதன் மூலம் நன்மையை பெற முடியும். வாகனம் ஓட்டும் பொழுது கவனமாக இருங்கள். திருமண முயற்சி தாமதமாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் நாள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களே இன்று மந்தமான சூழ்நிலை உருவாகும்.கையாள்வதற்கு கட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும் அதனால் மன உறுதி கொண்டு செயல்படுங்கள்.இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. துணையுடன் சேர்ந்து நல்லுறவு பாராட்டுங்கள். பதற்றத்தை குறைத்து கவனமாக செயல்படும் நாள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இன்று குடும்பத்தினரால் உங்களுக்கு சந்தோஷம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேலோங்கி காணப்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான பணவரவு கிடைக்கும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்யும் நாள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களே இன்று குடும்பத்தாருடன் பேசி மகிழ்வீர்கள். பணவரவுகள் தாராளமாக கிடைக்கும். திருமணம் பற்றிய பேச்சுக்கள் கைகொடுக்கும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.ஒரு சிலருக்கு தொழில் விஷயமாக வெளியூர் செல்ல வாய்ப்பு வரும். மனைவிக்கு இன்று உடல் நலம் குறைவு ஏற்படும்.மகிழ்ச்சியான நாள்.

துலாம்:

துலா ராசிக்காரர்களே இன்று உங்களது உடல் மிகவும் சோர்ந்து காணப்படும். உடல் அசதி இருந்தாலும் கொடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடித்துக் காட்டுவீர்கள். வரவும் சரி, செலவும் சரி சமமாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கினால் கவனமுடன் வாங்குங்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். கடன் குறையும். மன உறுதி பெறும் நாள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே இன்று மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.நண்பர் மூலமாக எதிர்பார்த்த பண வரவு உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில் விஷயத்தில் கவனம் தேவை. செலவு ஏற்படும் நாள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே இன்று மிகவும் கடினமான ஒரு காரியத்தை கூட எளிதில் முடிக்கும் ஆற்றல் இன்று உங்களுக்கு கிடைக்கும். சுபச்செய்திகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பரப் பொருட்களை விலை கொடுத்து வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். மன மகிழ்ச்சி பெருகும் நாள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களே இன்று பணப்புழக்கம் குறையும். சிக்கனமாக செலவு செய்தால் செலவை குறைக்கலாம்.கூட்டுத் தொழில் செய்பவர்கள் உங்களின் கூட்டாளியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிட்டும். சிக்கனமாக செயல்படும் நாள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்துவீர்கள். எடுத்த காரியம் எளிதில் முடியும். எதிரிகள் கூட நண்பராக உங்களை பார்ப்பார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கடன் தொல்லை இன்று குறையும். குடும்பத்தில் மன நிம்மதி பெருகும். திறமையான நாள் அமையும். திருப்திகரமான நாள்.

மீனம்:

மீன‌ ராசிக் காரர்களே இன்று திடீர் செலவு ஏற்படும் நாள். பிள்ளைகளால் மனக்கசப்பும் உண்டாகும். உறவினர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். தொழில் விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உள்ளது. அனுகூலமான பலன் அமையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். செலவுகளை குறைக்கப் போராடும் நாள்.

Previous articleஅனைவருக்கும் புதன்கிழமை இனிய காலை வணக்கம்! சகல சௌபாக்கியமும் பெற விநாயகரை வணங்குங்கள்!
Next articleஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க முடியவில்லையா:?அப்போ இந்த தெய்வ வழிபாட்டை செய்து பாருங்கள் எப்படியாப்பட்ட வேலையும் உங்கள் கைவசம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here