பெரும் துயரில் ஆழ்ந்த ஐ.நா சபை? காரணம்??

Photo of author

By Parthipan K

உலகையே உலுக்கிப் போட்ட கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் கல்வி வளர்ச்சியில் வரலாறு காணாத பின்னடைவு ஏற்பட்டதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் வெளியிட்ட வீடியோவில்  கூறியதாவது:

ஜூலை  மாதத்தில் மட்டும் உலகம் முழுவதும்160-க்கு  மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் 100 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் 4 கோடி ஆரம்ப கல்வி கிடைக்காமல் போனது.

பெண் கல்விக்காக பல ஆண்டுகள் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது  கொரோனா முழுவதுமாக பாழ்படுத்துவிட்டது.

பள்ளிகளை நீண்டகாலம் மூடப்பட்டது, கல்வி பெறுவதில் சமூகத்தினருக்கு இடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளை மீண்டும் கொண்டு வந்து விடுமோ? என்ற கவலையில் உள்ளதாக ஐநா சபையின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.