சொந்த மாவட்டத்திலேயே அடைந்த தோல்வியால் சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிசாமி

0
102

சொந்த மாவட்டத்திலேயே அடைந்த தோல்வியால் சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிசாமி

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய அளவில் அதிமுக அங்கம் வகிக்கும் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று மீதி இடங்களில் அதிமுக உட்பட கூட்டணி கட்சிகள் அனைத்துமே தோல்வியை தழுவின.

தோல்விக்கு முக்கிய காரணம் பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த காலங்களில் தமிழகத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது தான் என்றாலும், அதற்கு முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் தமிழகத்திற்கு பெரிதாக எதையும் செய்ததில்லை.மேலும் இலங்கை தமிழர் படுகொலையில் கண்டும் காணாமல் இருந்து தமிழக மக்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்தது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த நினைத்த எட்டு வழி சாலை, தூத்துக்குடி கலவரம் மற்றும் தேசிய அளவில் செயல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை,GST வரி விதிப்பு போன்றவை தமிழக மக்களின் மனதில் பாஜகவிற்கு எதிராக பதிந்து விட்டது. இது போன்ற திட்டங்களுக்கு ஆளும் அதிமுக அரசும் துணை போனது மேலும் தமிழக மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு பொதுவான காரணங்கள் நிறைய இருந்தாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அவரது தனிபட்ட செல்வாக்கின் மூலம் வெற்றி பெற்று விடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் வகையில் திமுகவின் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அடைந்த இந்த தோல்வி அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கட்சிக்குள் இருந்த உட்கட்சி பிரச்சனைகளும்,கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்த போது பாதிக்கப்பட்டவர்களும் சமயம் பார்த்து இந்த தேர்தலில் துரோகம் செய்துள்ளதாக பரவலாக பேசி வருகிறார்கள்.

மேலும் படிக்க

ஸ்டாலினை ஆட்சியை பிடிக்க விடாமல் மீண்டும் விரட்டியடித்த பாமக.

மேலும் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்தில் அவரை தவிர வேறு யாரையும் சேலம் மாவட்டத்தில் வளர விடவில்லை என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் வன்னியர்கள் பெரும்பான்மையினர் வாழும் சேலம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் அவர்களை இவர் தொடர்ந்து புறக்கணித்து வந்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

எல்லா சமூக மக்களையும் பகைத்து கொண்டு தன்னுடைய சொந்த சமூகமான கொங்கு வெள்ளாள மக்களுக்கு பெரும்பான்மையான உதவிகளை இவர் செய்திருந்தும் இந்த தேர்தலில் அந்த சமுதாய மக்களும் இவரை காலை வாரி விட்டுள்ளனர்.மேலும் தேர்தல் செலவுக்காக வாங்கிய பணத்தை பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

ஜெயலலிதா இல்லாத,கட்சி இரண்டாக பிரிந்து கிடக்கும் நிலையில் தேர்தலை சந்தித்த எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் தேமுதிக வாக்குகள் ஓரளவு கை கொடுத்து வாக்கு சதவீதத்தை ஓரளவு உயர்த்தியுள்ளது. அதிமுகவிலிருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்ட சசிகலா மற்றும் தினகரன் அணியினருக்கு எங்கும் செல்வாக்கில்லை என்பது இந்த தேர்தலில் உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க

தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?

இவ்வாறு ஆட்சியை ஓரளவு தக்கவைத்து கொண்ட எடப்பாடி பழனிசாமி இனி தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை கண்டறிந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.