கல்கி எழுதி உருவான பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது இயக்குனர் மணிரத்னம் உடைய நீண்டநாள் கனவாகும்.
இந்தப்படத்தை தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி முன்னணி திரைப்பிரபலங்கள் இணைந்து நடிக்கும் வரலாற்று சார்ந்த திரைப்படம்.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவில், கவிப்பேரரசு வைரமுத்து-வின் பாடல் வரிகளில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கான கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்ந்தெடுப்பதில் மணிரத்தினம் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஏனென்றால் இவர்களின் கதாபாத்திரங்களும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குனர் மணிரத்தினம் பெரும் கவனமாக உள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி, அருள்மொழிவர்ம கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, சுந்தரசோழன் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய், பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் என திரையுலக முன்னணி நடிகர்கள் இவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இவர்களை தொடர்ந்து பார்த்திபன், ரகுமான், ஜெயராம், அமலா பால், ஐஸ்வர்யா லட்சுமி, நயன்தாரா, த்ரிஷா என பல நடிகை நடிகர்கள் நடிக்கின்றனர்.
இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப நடிகர்களை தேர்வு செய்து, அதனை தனது படத்தின் வெற்றிக்கான காரணமாக சீக்ரெட்டாக வைத்திருந்தநிலையில் தற்பொழுது எல்லாம் வெட்ட வெளிச்சமானது என்பதால் இயக்குனர் மணிரத்தினம் பயங்கர கடுப்பில் உள்ளாராம்.