அத்துமீறி நுழைந்தவரை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்

0
168

இந்திய ராணுவத்தின் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாலாகோட் பகுதியில் தொடர்ந்து அத்துமீறிவர முயன்றனர்.

பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டம் மற்றும் ரஜௌரி மாவட்டத்திலுள்ள சுந்தா்பனி பகுதிகளுக்குள்பட்ட கஸ்பா, பாலாகோட்,கிருஷ்ணகதி, கிர்ணி, மான்கோட், மென்தா் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் எல்லை பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில் பாலாகோட் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் தொடர்ந்து 4 முறையாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ எல்லை வீரர்கள் மீது துப்பாக்கியால் சுடுவதும், சிறிய ரக குண்டுகள் வீசியும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது எனக் கூறினார்.

இன்று அதிகாலை 1 மணியளவில் பார்மரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அத்துமீறி இந்திய ராணுவ பகுதியில் நுழைய வேலியின் மீது ஏறி குதித்தார்.ரோந்து பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தவரை சுட்டுக் கொன்றனர்.

Previous articleவெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்
Next articleரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here