கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் சிவிஆர் கருவி கண்டுபிடிப்பு?

0
137

வெளிநாடு வாழும் இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியா விமானம் துபாய் சென்றது.நேற்று மாலை 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானிகள், 6 சிப்பந்திகள் என மொத்தம் 191 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.41 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரத்திலேயே தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், கோழிக்கோடு விமான நிலையத்தை அடைந்தது.இவர்களைத் தொடர்ந்து தேசிய மீட்பு குழு படையினரும் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர்,என அனைவரும் விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே கேரள முதல்வருக்கு அலைபேசியின் மூலம் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.நள்ளிரவு 12 மணி வரை இந்த மீட்பு பணியானது நடைபெற்றது.

இந்த விமான விபத்தில், விமானி, துணை விமானி உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்தாகவும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது
காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த விமானம் விபத்துக்கு இரண்டு முக்கிய காரணங்கள் தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து சரியான காரணம் கண்டுபிடிக்க அந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
விபத்து ஏற்படுவதற்கு முன்பு, விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு செய்யப்பட்ட சிவிஆர் கருவியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமா?அல்லது விமான ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருந்ததே காரணமா? என்பது இந்தக் கருவிகள் மூலம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்!
Next articleநாளை மாலை 6 மணிக்கு தமிழக மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்! பாஜக அழைப்பு!