தமிழக மின்சார வாரியம் சார்பாக கடந்த மார்ச் மாதம் கேங்மேன் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக நேரடித் தேர்வு நடத்தப்பட்டது.இதில் பல தொழிற் சங்கங்களை சேர்ந்தவர்கள் லஞ்சம் கொடுத்து பலரை வேலைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் உடல் தகுதியில் தோல்வியடைந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனை விசாரித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டது.இதுதொடர்பான விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.இது தொடர்பான மனுவை பொதுச்செயலாளர் ராஜா ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட்டது.இந்த பணியில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த பலரை சில தொழிற்சங்கங்கள் லஞ்சம் கொடுத்து வேலைக்கு எடுத்துள்ளதாக குற்றசாட்டு கூறப்படுகிறது.
80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் உடல்தகுதி தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் என்பதாலும்,லஞ்ச கொடுத்ததில் அதிகமானோர் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கான விசாரணையை நடத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்று லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.