கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அவ்வப்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.ஆகஸ்ட் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் கடைகள் மற்றும் வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது.
அடுத்தக்கட்ட தளர்வாக நாளை முதல் (ஆகஸ்ட் 10)கோயில்கள் மற்றும் ஓட்டுநர் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விதிக்குட்பட்ட கோயில்களுக்கு மட்டுமே அனுமதி?
மாநகராட்சி மற்றும் நகராட்சி யில் உள்ள சிறிய கோயில்கள் திறக்க நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அதாவது ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழே உள்ள கோயில்கள்,மசூதிகள்,
தேவாலயங்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் மாநகராட்சி மற்றும் நகராட்சி கோவில்களையும் திறக்க அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்ற பின்பே திறக்க அனுமதி அளித்துள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி பொருத்தமட்டில் கமிஷனரிடம் முறையான அனுமதி பெற்று கோயில்களை திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாளை முதல் ஓட்டுநர் பள்ளிகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.