கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!

0
125

பேச்சுவழக்கில் வார்த்தைகளை மாற்றுவது போல பழமொழியையும் மாற்றி அதற்கு புதிதாக அர்த்தத்தையும் கண்டுபிடித்துள்ளோம். நாய் கண்ணில் தென்படும் போது கல்லைக் காணோம். கையில் கல் கிடைக்கும் போது அதை எடுத்து நாயை அடிக்கலாம் என்று பார்த்தால், நாயைக் காணவில்லை. ஆனால் இது உண்மையான பழமொழியும் அல்ல அதற்கான அத்தமும் இது அல்ல.

‘கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்’

இதுவே உண்மையான பழமொழியாகும். இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது. பொதுவாக கல்லால் செதுக்கப்பட்ட கடவுள் சிலைகளை நாம் பார்த்திருப்போம். அதை வெரும் கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை காண முடியாது. அதுவே அதனை கடவுள் என நினைத்துப் பார்க்கும்போது அங்கு கல் இருப்பது தெரியாது.

இங்கு நாயகன் என்ற வார்த்தையே காலப்போக்கில் மருவி நாய் என மாறிவிட்டது.