மேட்டூர் அணையின் நீர்வரத்து இரட்டிப்பானது

0
121

தென்மேற்கு பருவமழை தொடர்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணையின் நிர்திறப்பு நேற்று 45,000 கடி அடி நீர் வந்திருந்தது. அதிகமாக மழை பெய்து வருவதால் தண்ணீர் திறப்பு இரட்டிப்பாக திறந்து விடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று ஒகேனக்கல்லில் நீர்வரத்து 45000 கன அடியிலிருந்து 90 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து அதிகமாகி உள்ளது.

தற்போது மேட்டூர் அணையின் நீர் வரத்து 90 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வருகிறது.இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக காவேரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.அணையில் இருந்து பாசனத்திற்காக ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் ,அணையின் நிரம்பும் வேகம் அதிகமாக இருப்பதால் மேலும் அதிகமாக தண்ணீர் திறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

Previous articleசித்த மருத்துவத்தால் குணமான 70வயது தந்தை: கொரோனாவிற்கான சித்தா சிகிச்சை பற்றி விளக்கும் மகன்
Next articleஉடம்பு முழுவதும் சேறு பூசிக்கிட்டு நிஜ விவசாயியாகவே மாறிய பிரபல நடிகர்!! என்னா நடிப்புடா சாமி!!