இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் பட்டியல் வெளியீடு! நம்ம முதல்வர் எத்தனையாவது இடம்?
பிரபல பத்திரிக்கை ஒன்று இந்தியாவில் தலைசிறந்த முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பிரபல பத்திரிக்கை நிறுவனம் மூட் ஆப் நேசன் என்னும் தலைப்பில் சர்வே ஒன்றை எடுத்தது. இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் யார்? எனப்படும் சர்வே.
இப்பொழுது தலைசிறந்த முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக உத்திரபிரேதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மூன்று முறை முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் 10 இடத்தில் கூட இடம் பிடிக்கவில்லை. இதனால் தமிழக மக்கள் மிகவும் விரக்தியில் உள்ளனர். என்னதான் அரசியல் காரணமாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் மருத்துவ துறை, கல்வித்துறை என பல துறைகளில் தமிழகம் முதலிடத்தை பெற்று விளங்குகிறது.
அப்படி இருக்கும்போது தலைசிறந்த முதல்வர் பட்டியலில் பாரபட்சம் ஏன் வந்தது? பத்து இடங்களுக்குள் வரத் தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி என்றும், இந்த அறிக்கை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.