கொரோனா தந்த புது வாழ்வு!! கடந்த 4 மாதங்களில் இரட்டிப்பு லாபம் அளித்த ஹெல்த்கேர் பங்குகள்!!

கொரோனா தோற்று பரவலை தொடர்ந்து, நாட்டின் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்து இதுவரை பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடு கிட்டத்தட்ட 70 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேசமயம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இந்த காலகட்டத்தில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திற்கு முன்பு நான்கு ஆண்டுகளாக பார்மா பங்குகளை முதலீட்டாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

இதனால் ஏராளமான பார்மா பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து புதிய 52 வார குறைந்த விலையை பதிவுசெய்து வண்ணம் இருந்தது. 

இந்நிலையில் உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவல் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது. மேலும் தொழில் துறை உட்பட அனைத்து தரப்பினரும் என்ன செய்வது  என்று தெரியாமல் கையை பிசைந்த வண்ணம் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில்  கொரோனா தாக்கத்தை தொடர்ந்து ஹெல்த்கேர் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. கொரோனா  தொற்றுக்கு அல்லது மருந்து கண்டுபிடிப்பதற்கான உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், சமீபத்திய காலங்களில் உலகம் அதன் மிகப்பெரிய சுகாதார நெருக்கடியில் ஒன்றை எதிர் கொண்டுள்ளதால்  ஹெல்த்கேர் நிறுவன பங்குகள் சிறப்பாக செயல்படும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Leave a Comment