பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கின் சொத்து மதிப்பு இன்ஸ்டாகிராமின் மூலம் அதிகரித்துள்ளது.
டிக் டாக் செயலிக்கு எதிராக மற்றொரு செய்யலியை இன்ஸ்டாகிராமின் மூலம் இன்ஸ்டா ரீல்ஸை அறிமுகம் செய்தது பேஸ்புக் நிறுவனம்.
இதன் மூலம் வருவாய் ஆனது பல மடங்கு உயர்ந்துள்ளது.
ரீல்ஸ் செயலின் அறிமுகத்தால் பேஸ்புக்கின் பங்கானது ஆறு சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. ஏற்கனவே ஃபேஸ்புக்கின் 13 சதவீத பங்குகள் மார்க் சக்கர்பெர்க் இடம் உள்ளது. இதனால் இவரின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து, தற்போது 100 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது.
100 பில்லியன் டாலர்கள் சொத்துக்கள் கொண்ட பெரும் பணக்காரர்கள், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் போன்றோரை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
மேலும் தனது மனைவி பிரிசில்லா சானுடன் அமைத்துள்ள அறக்கட்டளையில், பேஸ்புக் நிறுவனத்தின் 99% பங்குகள் அனைத்தையும் சேர்த்து தனது வாழ்நாளில் தானம் செய்யப் போவதாக திட்டமிட்டுள்ளார்.
டிக் டாக் இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. டிக் டாக் செயலிக்கு போட்டியாக இன்ஸ்டாகிராமில் இன்ஸ்டா ரீல்ஸ் எனும் வசதியின் மூலம் டிக் டாக்கை போலவே வீடியோ பதிவு செய்யலாம். ஆதலால் இதற்கு பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.