முகத்தை விட கை கால் கருப்பா இருக்கா:?இதை போட்டு குளித்தால் ஒரேவாரத்தில் சருமம் மினுமினுக்கும்!

Photo of author

By Pavithra

சிலருக்கு முகத்தை ஒப்பிடுகையில் கை மற்றும் காலின் நிறம் கருமையாக இருக்கும் இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.அதில் இரண்டு முக்கியமான காரணங்கள்:

காரணம் 1:

முகத்தை விட கை மற்றும் கால்களில் சூரிய ஒளி அதிகமாக படுவதால் முகத்தை விட கை மற்றும் கால்களின் சருமம் மிகவும் கருப்பாக காணப்படுகின்றது.

காரணம் 2:

பொதுவாகவே எல்லோரும் அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவுவர்.இதனால் முகத்திலுள்ள டெட் செல்கள் இறந்து முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வோம்.
ஆனால் கை மற்றும் கால்களை அடிக்கடி தண்ணீரில் கழுவும் வாய்ப்பு இருக்காது,இதனால் டெட் செல்கள் கை மற்றும் கால்களில் சருமத்தைலையே
தங்கிவிடுவதால்
முகத்தை விட கை மற்றும் கால்கள் கருப்பாக இருக்கும்.

எந்த வகை காரணமாக இருந்தாலும் கை மற்றும் கால்களின் கருமையான சருமத்தை வெண்மையாக இதோ உங்களுக்கான டிப்ஸ்

தேவையான பொருட்கள் :

பச்சைப்பயிறு ஒரு கப், ஆவாரம்பூ, வீட்டில் அரைத்து பொடி செய்த மஞ்சள்,கடலை மாவு

செய்முறை :
பச்சைப்பயிறு மற்றும் ஆவாரம்பூவை 50 கிராம் அளவு போட்டு அரைத்து அதில் 25 கிராம் மஞ்சள் பவுடர் மற்றும் 25 கிராம் கடலை மாவு சேர்க்க வேண்டும்.

இதில் சிறிதளவு தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து தினமும் குளிக்கையில் பூசி குளித்தால் சருமம் பொலிவு பெறுவதோடு மெண்மையாகவும் இருக்கும்.

மஞ்சள் சேர்ப்பதால் கை மற்றும் கால்களில் இருக்கும் முடிகள் கொட்டிவிடும்.