இன்றைய ராசி பலன்- 14.08.2020

0
128

இன்றைய ராசி பலன்- 14.08.2020

நாள் : 14.08.2020

தமிழ் மாதம்:

ஆடி 30 வெள்ளிக்கிழமை.

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை.

இராகு காலம்:

மதியம் 10.30 முதல் 12.00 வரை.

 எம கண்டம்:

காலை 03.00 முதல் 04.30 வரை.

 குளிகன்:

பகல் 7.30 முதல் 9.00 வரை,

திதி:

தசமி திதி பகல் 02.02 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி ஆகும்.

நட்சத்திரம்:

இன்றைய நாள் முழுவதும் மிருகசீரிஷம் நட்சத்திரம்.

இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே இன்றைய நாள் மிக நல்ல நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். உடல் நலம் நன்றாக இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும். கணவன் மனைவி உறவு பலப்படும்.குடும்பத்தில் அமைதி நிலவும். ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இன்று பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும். ஆடை, ஆபரணச்சேர்க்கை சேரும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தொழிலில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் மதிப்பும், மரியாதையும் உயர்வதற்கு வாய்ப்பு உண்டு. சொந்த தொழில் செய்பவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வெற்றி அடையும் நாள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று தன வரவு வரும். நீண்ட நாள் எதிர்பார்த்து இருந்த பணம் வந்து சேரும். சுபச் செலவுகள் கை மீறி செல்லும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பிரயாணங்கள் வெற்றி தரும். அரசு தொடர்பான வேலைகள் முடிவடையும். வழக்கு சம்பந்தப்பட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்

கடகம்

கடக ராசிக்காரர்களே நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வசூலாகாமல் இருந்த பணம் திரும்ப வரும். நல்ல நிகழ்வுகள் உண்டு. பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும்.குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். பொருளாதாரத்தில் ஏற்றத்தை காண்பீர்கள். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும்.அரசு துறையில் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் முடிவடையும். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடுகளில் இருந்து தனவரவு எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் கிடைக்கப்பெறும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும்.கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும்

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்திசாலித்தனம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார விஷயமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். மாணவர்களின் கல்விநிலை ஓங்கும். பெருமை வந்து சேரும் நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை வரும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை வந்து சேரும். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று அரசு தொடர்பான காரியங்கள் முடிய வாய்ப்பு உள்ளது. கலைத் துறையிலும், பத்திரிகைத் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்ற நாள் ஆகும். புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் மனக்கவலை உண்டாகும். எதிர் பாராத செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்றைய நாள் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். விவசாயம் தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும், வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வயதானவர்களுக்கு சற்று உடல்நிலையில் தொல்லைகள் கொடுத்து சரி செய்யக்கூடிய நாளாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் வீண் வாக்குவாதங்களை ஏற்படும். எந்த காரியத்தையும் கடின உழைப்பிற்க்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். இதனால் வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும்.

 

 

Previous articleஆறு மணி நேரத்தில் டெல்லி டு காஷ்மீர் செல்லும் விரைவு சாலை?
Next articleஇனி வருமான வரி செலுத்தாமல் யாரும் தப்பிக்க இயலாது :? வருமான வரி துறையின் புதிய திட்டம்