அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா பாஜக? கூட்டணி குறித்து முருகன் விளக்கம்

0
201

தமிழகத்தில் தற்போது அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்து வருகிறது. என்ன நிலையில் தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியுள்ளதாவது, “இன்று அதிமுகவுடன் கூட்டணி உள்ளது நாளை அது வேறாக இருக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து பேச ஆரம்பித்துவிட்டனர்.

இதில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? அதிமுக பாஜக கூட்டணியா? இல்லை பாஜக திமுக உடன் கூட்டணியா? திமுக மற்றும் அதிமுக மட்டுமே போட்டியா? என்பதெல்லாம் பற்றி பல்வேறு வகையான வியூகங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது பாஜக மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி கூட்டணி குறித்து கூறுகையில், பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் எனவும் அந்தக் கூட்டணிக்கு பாஜக மற்றும் திமுகவுடன் தான் இருக்குமென கூறியிருந்தார்.

இதன் பிறகு தற்போது பாஜக மாநில தலைவர் முருகன் கூறும்போது, “இதுவரை பஜகா அதிமுகவுடன் மட்டும்தான் கூட்டணியில் இருக்கிறது என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும் இன்று அதிமுகவுடன் கூட்டணி யில் இருக்கும், நாளை அதுவே ஆக இருக்கலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஇனி செவ்வாய்தோறும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு
Next articleஇரண்டாவது டெஸ்ட் : மழையோடு விளையாடும் பாகிஸ்தான் அணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here