சச்சின் பைலட்டின் புது வியூகம்! ராஜஸ்தான் காங்கிரசில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவருகிறார்

0
158

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையில் ஏற்பட்ட ஆட்சியில், அதிகார மோதல்கள் எழுந்ததை அடுத்து அந்தக் கட்சியிலிருந்து சச்சின் பைலட் அதிருப்தி அடைந்து தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் வெளியேறினார்.

அதன் பிறகு அதிருப்தியடைந்த சச்சின் பைலட் பிஜேபிக்கு செல்வதாக இருந்தது. பின் அவர்கள் மீண்டும் காங்கிரசிற்கு திரும்பினர்.

அதில் துணை முதலமைச்சரான சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து சுமூகமான முடிவினை எடுத்து கட்சியில் இணைந்தார்.

Sachin Pilot's new strategy!  Rajasthan is bringing tremendous change in the Congress
Sachin Pilot’s new strategy! Rajasthan is bringing tremendous change in the Congress

 

மேலும் சச்சின் பைலட் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்குள் எழுப்பிய பிரச்சனையை பற்றி ஆராய மூன்று பேர் கொண்ட குழுவினை அமைக்க சோனியா காந்தி உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் நேற்று அந்த மூன்று பேர் தலைமையில் அமைந்த குழுவினை பற்றி கட்சி அறிவித்துள்ளது. இந்தக் குழு ராஜஸ்தான் காங்கிரஸில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும், மேலும் சச்சின் பைலட் எழுப்பிய பிரச்சனைகள் குறித்து ஆராய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் காங்கிரஸின் மூத்த தலைவர்களான அகமது பட்டேல், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான் ஆகிய மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு ராஜஸ்தான் காங்கிரஸில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து அதுபற்றிய அறிக்கையினை தயார் செய்து கட்சியின் மேலிடத்திற்கு அனுப்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்கள் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்: இல்லையெனில் நடவடிக்கை
Next articleபெற்றோர்களின் கவனத்திற்கு:! “பள்ளிகளில் இன்றுமுதல் மாணவர் சேர்க்கை”!