மதச் சண்டையை உருவாக்க முயன்ற குஷ்புவை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்

0
177

மதச் சண்டையை உருவாக்க முயன்ற குஷ்புவை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்

சமீபத்தில் பதவியேற்ற பாஜக அரசை தொடர்ந்து மதத்தின் பெயரால் விமர்சித்து வரும் காங்கிரஸ் சம்பந்தமில்லாத பிரச்னைகளுக்கெல்லாம் மதத்தை இழுத்து மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜக அரசும் தொடர்ந்து மதம் சம்பந்தமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது ஆனால் மத சண்டையை தூண்டும் வகையில் செயல்படவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் வட இந்தியாவில் நடைபெற்ற ஒரு பிரச்சனை குறித்து குஷ்புவும்,காயத்ரி ராகுராமும் கொள்கை ரீதியாக ட்விட்டரில் மோதி கொண்டனர்.

இந்த விவகாரத்தில் ‘என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிய முயற்சிக்க வேண்டாம். உங்கள் மத துவேஷத்தை மன்னிக்கவே முடியாது’ என்று பாஜகவை சேர்ந்தவரும், நடிகையும், பிரபல டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் காங்கிரஸ் கட்சியின் குஷ்புவை ட்விட்டரில் வெளுத்து வாங்கியுள்ளார்.

இதுகுறித்து நடிகை குஷ்புவும் ஆவேசமாக தனது ட்விட்டரில், இதுதான் புதிய இந்தியாவா? ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தி ஒரு இளைஞரை ஒரு கும்பல் கொன்றே விட்டது என்று ஆதங்கத்துடன் பதில் அளித்திருந்தார்.ஆனால் அவர் குறிப்பிட்ட அந்த இளைஞர் ஒரு திருடர் என்பது குறித்தும் அவர் திருடியது குறித்தும் குஷ்பு அங்கு எதையும் பதிவும் செய்யவில்லை. இதிலிருந்தே அவர் இந்த சம்பவத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார் என்பது தெளிவாகிறது.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காயத்ரி ரகுராம், ‘இந்துக்கள் என்றாலே கொலைகாரர்கள் என்ற ரீதியில் சொல்வது தற்போது டிரெண்ட் ஆகிவிட்டது. மற்ற மதத்தினர் இதே தவறை செய்யும்போது குஷ்பு ஏன் வாயைத் திறப்பதில்லை? என்றும் பதிவிட்டிருந்தார். 

அதற்கு குஷ்பு,காயத்ரி ரகுராம் கேட்கும் கேள்விகளை சமாளிக்க முடியாமல் ‘உங்களை போன்றவர்களிடம் நான் விவாதம் செய்ய தயாராக இல்லை. மறைந்த உங்கள் தந்தை, தாயார் மற்றும் உங்கள் உறவினர்கள் அனைவர் மீதும் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எனவே ஷட்டப், வாயை பொத்தி கொண்டு இருக்கவும்’ என்று மழுப்பலாக பதில் அளித்து பதிவிட்டிருந்தார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த காயத்ரி, ‘நீங்கள் என் குடும்பத்தினர் மீது அன்பு வைத்துள்ளீர்கள் என்பதற்காக என் மதத்தை இழிவு செய்தால் நான் சும்மா இருக்க முடியாது. என் உலகம் பரந்து விரிந்த உலகம். மரியாதையாகப் பேச கற்று கொள்ளவும்’ என்று காட்டமாக பதிலளித்ததுடன், மேலும் ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது என் குடும்பத்தினர் மீது அன்பு வைத்திருப்பதாகக் கூறி நழுவ வேண்டாம்.

https://twitter.com/gayathriraguram/status/1143890737836089350?s=19

மேலும் நான் உங்களுக்கு எதிரான கட்சியில் இருக்கின்றேன். ஓடி ஒளிய முயற்சிக்காமல் நான் கேட்கும் கேள்விக்குப் பதிலளியுங்கள். உங்கள் மீது தனிப்பட்ட வகையில் எனக்கு எந்த பகையும் இல்லை. நான் எனது உரிமைக்காக வாதிடுகிறேன்’ என்றும் பதிலளித்துள்ளார். இவ்வாறு தேவையில்லாத சம்பவங்களில் எல்லாம் மதத்தை இழுத்து அரசியல் செய்யும் காங்கிரசை சேர்ந்த குஷ்பும் அதையே செய்ய தக்க சமயத்தில் பாஜகவை சார்ந்த காயத்ரி ரகுராம் அவரை வெளுத்து வாங்கியுள்ளார்.

Previous articleதமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.? மத்திய அரசுடன் போராடும் எடப்பாடி பழனிசாமி
Next articleஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினியை மாற்ற இது தான் காரணமா?