டாஸ்மாக் கடை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி:! அச்சத்தில் குடிமகன்கள்!

0
121

தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகின்றது.அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கொரோனா பரிசோதனையை செய்து கொண்டார். கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் நேற்று வழக்கம்போல் கடை திறந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்ட அவருக்கு கொரோனா டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவ் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்பொழுதும் கூட அந்த ஊழியர் கடையை மூடாமல் அருகில் அமர்ந்து மற்றொரு ஊழியரை பணி செய்ய வைத்தார்.தகவலறிந்து வந்த சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி கடையை தற்காலிகமாக மூடி கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி இவருடன் பணியாற்றிய சக டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினார்கள்.
மதுப்பிரியர்கள்.
இருந்தபோதிலும் அவர்கள் மதுபானத்தை வாங்க தவறவில்லை.இந்தக் கடை மூடினால் என்ன நாங்கள் அருகில் உள்ள கடையில் மதுபானத்தை வாங்குவோம் என்ற பாணியில் தொற்று உறுதி செய்யப்பட்டு மூடப்பட்ட மதுக் கடைக்கு அருகில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர்.

Previous articleஇந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் கண்பார்வை கூடுமாம்.. மேனி பொன் போன்று மின்னுமாம்..!!
Next articleபழைய டிவி, ரேடியோக்களில் சிவப்பு பாதரசம் தேடுவது மோசடியா? லாபமா?