இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் கண்பார்வை கூடுமாம்.. மேனி பொன் போன்று மின்னுமாம்..!!

0
150

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற சத்துகளும் மிகுந்த மருத்துவ குணங்களும் உள்ளன. கீரையைப் போன்ற உணவு வேறு எதுவும் இல்லை; கீரையைப் போல் நோய் தீர்க்கும் வைத்தியனும் இல்லை என்ற சித்தர் கூற்றுக்கு ஏற்ப இந்தக் கீரையில் நிறைய மகத்துவம் உண்டு. இந்த கீரை மேனிக்கு பொன்போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது. அதனால்தான் இதை பொன்னாங்கண்ணி என்று கூறினார்கள்.

பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி.

பொன்னாங்கண்ணியில் நாட்டுப் பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என இரண்டு வகை உள்ளது. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகிற்காக வளர்க்க கூடியது. ஆனால் நாட்டுப் பொன்னாங்கண்ணியில் நிறைய மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இதில் ஊட்டச்சத்து, கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, மினரல் சத்து, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது.

“காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்
கூசும் பீலீகம் குதாங்குர நோய் பேசி வையால்
என்னாங் காணிப்படிவம் எமம் செப்ப லென்னைப்
பொன்னாங்கண்ணிக் கொடியைப் போற்று”

என்ற அகத்தியரின் பாடல் பொன்னாங்கண்ணிக் கீரையில் உள்ள மருத்துவ குணங்களை கூறுகிறது. இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால் பொன்னாங்கண்ணிக் கீரை காச நோய், இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும் என்பது தான்.

பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள்:

*பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்பார்கள். அந்த அளவிற்கு இதில் சத்துக்கள் உள்ளன.

*பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

*பொன்னாங்கண்ணி கீரையுடன், பாசிபருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுதூள் ஆகியவற்றை சேர்த்து கடைந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.

*இந்தக் கீரையை துவரம் பருப்பு, நெய்யுடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

*இது வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவற்றை குணப்படுத்தும்.

*இது சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்தாகும்.

*கூந்தல் நன்றாக வளர பொன்னாங்கண்ணி கீரையின் சாற்றை தேங்காய் எண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தைலமாக பயன்படுத்தலாம்.

*500 கிராம் பொன்னாங்காணி கீரையுடன், 100 கிராம் வெங்காயமும், 6 பல் பூண்டும் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும்.

author avatar
Parthipan K