மூதாட்டியின் குடிசையில் இருந்து நகையை தூக்கிச் சென்ற குரங்குகள்!

0
87

மூதாட்டியின் குடிசையில் இருந்து நகையை தூக்கிச் சென்ற குரங்குகள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு அருகே மூதாட்டி சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை குடிசையிலிருந்து செவ்வாய்க்கிழமை அன்று தூக்கிச் குரங்குகள் சென்றுள்ள இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவையாறு அருகே உள்ள வீரமாங்குடி குதிரை கோவில் பகுதியை சேர்ந்தவர் சாரதாம்பாள். 70 வயதான சாரதா கணவன் இறந்ததால் தனிமையாக குடிசையில் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்து கொண்டு வந்துள்ளார். அந்த பணியில் வந்த பணத்தை இவர் சிறுக சிறுக சேமித்து வைத்துள்ளார்.

அந்த பணத்தை ஒரு பச்சரிசி நிரப்பப்பட்ட துணிப்பையில் அரை பவுன் மோதிரம், தோடு, கவரிங் சங்கிலி, ரூ. 25,000 பணம் ஆகியவை ஒரு வாளிக்குள் போட்டு மறைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இவர் வீட்டிற்கு எதிரே உள்ள குழாயடியில் தன்னுடைய துணிகளைத் துவைப்பதற்காக எடுத்துச் சென்று துவைத்துக் கொண்டிருந்த போது, அங்கு ஏகப்பட்ட குரங்குகள் வந்து சாரதாம்பாளின் வீட்டு கதவை திறந்து வாழைப்பழம் மற்றும் பணம் மற்றும் நகைகள் அடங்கிய வாளியையும் தூக்கிச் சென்றுள்ளன.

இதனை பார்த்த சாரதாம்பா ஓடிப்போய் தூரத்தியதில் அந்த குரங்குகள் மருத்துவமனை மாடியில் வைத்து விட்டு அரிசி பழங்களை தின்று கொண்டிருந்தபோது, நகையும் பணத்தையும் மீட்க வந்த மக்களைப் பார்த்த குரங்குகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன.

அப்பகுதியில் நீண்ட நாட்களாகவே அதிகமான குரங்குகள் வீட்டின் உள்ளே சென்று சாப்பிடுவதற்காக நிறைய பழங்கள், அரிசி பருப்புகள், என திருடி உண்டுள்ளன.

இப்பொழுது வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை தெரியாமல் எடுத்துக் கொண்டு சென்றதால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க கோரியும் மற்றும் பாதிக்கப்பட்ட சாரதம்பாளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.