தங்கம் வெள்ளி இறக்குமதி புள்ளிவிபரம்!!

0
123

நாட்டின் தங்க இறக்குமதி ஏப்ரல்-ஜூன் வரையிலான நான்கு மாதங்களில் 81%வீழ்ச்சி அடைந்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் புள்ளிவிபரங்கள் கூறியதாவது: கொரோனா தொற்றின் காரணமாக தேவையில் ஏற்பட்ட கணிசமான  வீழ்ச்சியைஅடைந்தது.

நடந்த 2020-2021 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் நாட்டின் தங்கத்தின் இறக்குமதி 81.22% சரிவடைந்து 247 கோடி டாலராக ( ரூ. 18,590 கோடி) இருந்தது.

அதே சமயம் இதன் இறக்குமதி கடந்த 2019-2020 ஆம் நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் 1,316 கோடி டாலராக ( ரூ. 91,440 கோடி ) மிகவும் அதிகரித்து காணப்பட்டது. 

இதேபோன்று வெள்ளி இறக்குமதி நடப்பு நிதி ஆண்டின் முதல் 4 மாத காலாண்டில் 56.5% குறைந்து 68.53 டாலராக ( ரூ. 5,185 கோடி) இருந்தது.

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி கணிசமான அளவில் சரிந்துள்ளது நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறைந்ததற்கு பெரிதும் உதவியுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின்  ஏப்ரல் ஜூன் காலகட்டத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இடையேயான வித்யாசமான வர்த்தகப் பற்றாக்குறை 1,395 கோடி டாலராக இருந்தது.

கடந்த நிகழாண்டில் வர்த்தக பற்றாக்குறை ஆனது 5,940 கோடி டாலர் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

எனவே அதிகரித்துவரும் தேவையை எடுத்து தங்கத்தை அதிக அளவு இறக்குமதி செய்துகொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது. அளவின் அடிப்படையில் நம் நாடு ஆண்டுக்கு 800-900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது

 

Previous articleதமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
Next article2020 கியூஜி என பெயரிடப்பட்ட புதிய விண்கல் பூமிக்கு அருகில் சென்றது :விஞ்ஞானிகள் அறிவிப்பு