2020 கியூஜி என பெயரிடப்பட்ட புதிய விண்கல் பூமிக்கு அருகில் சென்றது :விஞ்ஞானிகள் அறிவிப்பு
ஒரே எஸ்யூவி காரின் அளவிலான விண்கல் ஒன்று பூமிக்கு 1,830 மைல் (2,950 கிலோ மீட்டர்)கடந்து சென்றதாக நாசா கடந்த செவ்வாய்க் கிழமையன்று தெரிவித்துள்ளது.
சுமார் 10 முதல் 20 அடி நீளமுள்ள இந்த விண்கல் தெற்கு இந்திய பெருங்கடலுக்கு மேலாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 04:08 GMT மணிக்கு கடந்து சென்றது. இந்த விண்கல் வினாடிக்கு 12.5 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.புவியியல் சுற்றுப்பாதையில் சுமார் 22,000 மைல்களுக்கு கீழே பெரும்பாலான தொலைத்தொடர்பு செயற்கைக்கோளில் இது சென்றதாக நாசா கூறியுள்ளது.
கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் உள்ள பலர் ஆய்வகத்தில் தொலைநோக்கியின் ஸ்விக்கி டிரான் சிண்ட் ஃபெசிலிட்டி,விண்கல் அணுகிய 6 மணி நேரத்திற்குப் பிறகு இது முதன் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆய்வில், விண்கல் பூமிக்கு வருடத்திற்கு ஒரு முறை இதே தூரத்தில் செல்கின்து என்ற கருத்தினை அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.2020 கியூஜி என பெயரிடப்பட்ட இந்த விண்கல் எந்த சேதத்தையும் இருப்பிடத்தை ஏற்படுத்தவில்லை.
விண்கல் கிரகத்தை நோக்கி நேரடியாக செல்லாவிட்டால் அதை பதிவு செய்வது கடினமான சூழ்நிலையில் ,வளிமண்டலத்தில் அவை வெடித்து சிதறுவது போல பொதுவாக கவனிக்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டு ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் போலவே 66 அடி நீளமுள்ள ஒரு பொருளின் வெடித்தபோது சில மைல்கள் தூரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.