டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு??

0
105

அந்நிய செலாவணி சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து உள்ளது. 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 74.78 ஆக இருந்தது.

வர்த்தகத்தின் இறுதியில் முந்தைய தினத்தை காட்டிலும் ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து 74.88 ஆக நிலைபெற்றது.

வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 74.73 வரையிலும் குறைந்த பட்சமாக 74.89 வரையிலும் சென்றது. பங்கு வர்த்தகத்தில் விறுவிறுப்பு ஆகியவை ரூபாய் மதிப்பு வலுப்பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

பங்குச்சந்தை தரவுகளின்படி வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் மூலதன சந்தையில் ரூ.332.90 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச முன்பேர சந்தையில் வர்த்தகத்தில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.31 சதவீதம் உயர்ந்து 45.51 டாலர் நிலை பெற்றது.

 

 

 

Previous articleஇவர் நினைத்தால் டோனி மறுபடியும் விளையாட முடியும்
Next articleஐபிஎல் கிரிக்கெட் தொடர் அமீரகத்தில் நடக்குமா?