ஒரே நாடு ஒரே தேர்வு : மத்திய அரசின் புதிய திட்டம்

0
111

ஒரே நாடு ஒரே தேர்வு : மத்திய அரசு புதிய திட்டம்

மத்திய ,மாநில அரசு பணிகளுக்கும், வங்கி பணிகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வை அமைக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவேடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் முன் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ,ரயில்வே பணியாளர் தேர்வு, வங்கி பணியாளர் தேர்வு ஆகிய தேர்வுகளை முதல்கட்டமாக ஒரே நுழைவுத்தேர்வாக அமைத்து ஆன்லைன் மூலமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டதேர்வுக்கு செல்லலாம்.

இந்த தேர்வானது இந்தியாவில் பேசப்படும் 12 மொழிகளில் தேர்வு எழுதலாம்.இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்தி அடுத்த மூன்று வருடத்திற்குள் அடுத்தகட்ட தேர்வினை எழுதலாம்.

மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கு மாணவர்கள் தனித்தனியாக தேர்வு எழுதுவதால் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு ஒரே நுழைவுத்தேர்வு வைப்பதன் மூலமாக பணமும் ,தேவையற்ற நேரமும் தவிர்க்கப்படும் என்ற சிந்தனையை கருத்தில் கொண்டு புதிய திட்டத்தை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தேர்வு நடத்துவதால் முறைகேடு நடப்பதை தடுக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தனர்.

இந்தத் தேர்வின் மூலமாக தேர்ச்சி பெற்றவர்களை மாநில அரசு பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என அமைச்சர் ஜெகதீஷ் சிங் தெரிவித்துள்ளார். நுழைவுத் தேர்வு ,தேசிய பணியாளர் தேர்வு முகமை டெல்லியை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

Previous articleகண் பார்வை குறைபாடு சரியாக வீட்டில் உள்ள இந்த பொருளை பயன்படுத்துங்கள்!
Next articleமூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை குறித்து தமிழக முதல்வர் ஆய்வு?