பள்ளிகள் திறக்கும் வரை உலர் உணவுப் பொருள் வழங்கப்படும் : மாநில அரசு !

0
212

பள்ளிகள் திறக்கும் வரை உலர் உணவுப் பொருள் வழங்கப்படும் : தமிழக அரசு !

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள் வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்தது.

தற்பொழுது பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் வகையில் அனைத்துப் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள் வழங்கப்பட்டு வருகின்றது. உலர் உணவுப் பொருட்களில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி 100 கிராம் ,பருப்பு 40 கிராம் என்ற அளவிலும்,  உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரிசி 150 கிராமும்,பருப்பு 50 கிராமும் வழங்கப்படும் என்று மாநில அரசு கூறியுள்ளது.

Previous articleவிநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி ஊர்வலம் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்?
Next article‘சைக்கி’ விண்கல் இறங்கி வந்தால் பூமியில் எல்லோரும் கோடீஸ்வரர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here