சம்பா பயிர் காப்பீட்டு செய்ய இதுவே கடைசி நாள் !

0
104

சம்பா பயிர் காப்பீட்டு செய்ய இதுவே கடைசி நாள் !

தமிழகத்தில் பருவமழை நேரத்தில் தொடங்குவதும், தாமதமாக தொடங்குவதும் விவசாயிகளால் கணிக்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் விவசாயத்தில் பயிர் சாகுபடி செய்ய மழை காலம் மட்டுமே சரியான ஒன்றாக அமையும்.கடந்த ஆண்டு இயற்கை சீற்றம் ஏற்பட்டதால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வரை நஷ்டமாகியது.

விவசாயிகளின் பயிர்களை காக்கும் வகையில், பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசால் அமல்படுத்தியது. மத்திய அரசின் பிரதான் மந்திரி ஃபஷல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பயிர்களை காக்க உதவுகிறது.

மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ,இந்த ஆண்டுக்கான காரிஃப் பருவ பயிர் காப்பீட்டுக்கு 34% விவசாயிகள் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 2,74,178 விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 3,11,486 ஏக்கர் நிலங்களை பதிவு செய்தனர்.2020-ஆம் ஆண்டு கடந்த ஆகஸ்டு மாதம் வரையில் 3,66,227 விவசாயிகள் 4,53,197 ஏக்கர் நிலங்களை பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் சம்பா பயிர் காப்பீட்டுத் தொகைக்கு பதிவு செய்ய கடைசி தேதியாக நவம்பர் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூபாய் 448 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகமானோர் காப்பீடு திட்டத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous article‘சைக்கி’ விண்கல் இறங்கி வந்தால் பூமியில் எல்லோரும் கோடீஸ்வரர்கள்!
Next articleநானெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது! நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கறிஞர்