கணினி மயமாக்கப்பட்ட கைபொம்மைகள் நாம்! ஏழை ஒருவனின் கதறல்!!!!!!!!!
கடந்த ஆறு மாதங்களாக நம்மை வாட்டி வரும் கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் தவிக்கும் ஏழை ஒருவனின் கதறல்கள் இது!
“எங்கு இருந்தாய் இவ்வளவு காலம்!
ஆம் நாங்கள் அழிவை நோக்கி செல்கிறோம் உண்மைதான்!
குவிந்து கிடக்கும் பிணங்கள் உன் கோபத்தை தனித்து விடுமா சொல்?
விதைத்த வினையால் சாவிற்கு போராடும் எங்களை கண்டு உன் தாகம் அடங்கி விடுமா சொல்?
காலங்களை மறந்து குடும்ப சுகங்களை துறந்து நாகரீக வாழ்க்கை மோகத்தில் எங்களை அர்பணித்து கொண்ட எங்களை கண்டு பாசக்கயிற்றை வீசினால் அடங்கி விடுவாய சொல்?
நாங்கள் மறந்த காலத்தை திருப்பி கொடுத்துளாய் என பெருமை படாதே!
அது மறந்து அல்ல மறைந்து நூற்றாண்டை கடந்து விட்டது!
நாங்கள் திருந்தவில்லை திருத்தப்பட்டுவிட்டோம் !
வட்டி கந்துக்காக மாதம் ஒடிப்பிழைக்கும் எங்களை வருத்தும் உன் நியாயம் தகுமா?
நீ காட்டும் பயத்தை விட கடன் காரணின் இரு சக்கர வாகனம் என்னை நிலை குலைய வைப்பதை நீ அறிவாயா?
நீ போடும் இந்த ஆட்டம் எங்களை ஆண்டுகளை கடந்து வாட்டுமே!
பிச்சை போட கூட ஆட்கள் வெளியே இல்லையே நான் என்ன செய்வேன்!
ஏழைகள் எங்களை கண்டு உன் மனம் இறங்காத !
ஏற்றத்தை காண நாங்கள் விரும்பவில்லை! ஒரு வேளை சோற்றை காண ஏங்குகிறோம் !
சென்று விடு!
நீ உணர்த்தியது போதும்!
திருந்தும் அளவிற்கு நாங்கள் புத்திசாலிகள் அல்ல!
கணினி மயமாக்கப்பட்ட கைப்பொம்மைகள்!!!!!!!!!!!!!!!!”.