கடந்த ஆண்டு தேசிய தூய்மை நகரம் பட்டியலில் 61- வது இடத்தை பிடித்த சென்னை மாநகராட்சி இந்த வருடம் பிடித்த இடம் :?

0
114

கடந்த ஆண்டு தேசிய தூய்மை நகரம் பட்டியலில் 61- வது இடத்தை பிடித்த சென்னை மாநகராட்சி இந்த வருடம் பிடித்த இடம் 😕

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியல் வருடவருடம் வெளியிட்டு வருகிறது.

பொதுமக்களின் கருத்து, நகர்ப்புற உள்ளாட்சி மேற்கொள்ளும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் ,மத்திய அரசு பிரதிநிதிகளின் மதிப்பீட்டு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வருடம் ஒருமுறை வெளியாகி வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு 235-வது இடத்திலிருந்த சென்னை மாநகராட்சி, 2018-ல் ஆம் ஆண்டு 100-வது இடத்துக்கும், 2019-ல் 61-வது இடத்துக்கும் முன்னேறியது.தூய்மை நகர பட்டியல்களில் மாநகர வளர்ச்சியில் சென்னை மாநகரம் வேகமாக முன்னேறி வரும் பெருமையை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் பட்டியலில் மொத்தமுள்ள 4,242 நகரங்களில் சென்னை மாநகராட்சி 312-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. தேசிய அளவில் மத்திய பிரதேசபிரதேச மாநிலத்தின் இந்தூர் தொடர்ந்து நான்கு வருடமாக முதலிடத்தை பிடித்துள்ளது.

10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டதாக 47 நகரங்கள் இடம்பெற்றுள்ளன .அதில் சென்னைக்கு 45 வது இடம் கிடைத்துள்ளது.தமிழகத்தில் மதுரை 42 ஆவது இடமும் ,கோவைக்கு 40 ஆவது இடமும் கிடைத்துள்ளது. இந்த பட்டியலிலும் சென்னை மாநகராட்சி பின் தங்கியுள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் தூய்மையான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான பிரிவில் சென்னை முதல் இடத்திலும் ,திறந்தவெளி அசுத்தம் செய்யும் பழக்கம் இல்லாத நகரம் சென்னை என தேசிய தூய்மையகம் அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் மக்கள் தங்களது வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வகைப்படுத்தும் நடைமுறையை சென்னை 100% கடைபிடிப்பதாக கூறியுள்ளனர்.

சென்னை மாநகரம் பின்தங்கியுள்ள காரணம் மாநகராட்சியில் உள்ள பொது கழிவுகள் சரிவர அகற்றப்படவில்லை, திடக்கழிவு மேலாண்மையை முறையாக கடைப்பிடிக்காத தொடர்பான வழக்குகளும் தேசிய பசுமை தீர்ப்பாயம் நடைபெறுவதாகவும் மாநகராட்சி பின்னடைவை சந்திப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாநகராட்சி சார்பில், மாநகரத்தில் தூய்மையைக் காக்க ஏராளமான திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கே.பிரகாஷிடம் கூறினார். இதற்காக அரசு தரப்பில் தூய்மையைக் காக்க அனைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

Previous articleகோரி ஆண்டர்சனின் நிதான ஆட்டத்தால் வெற்றி
Next articleஷூட்டிங்கிருந்து திடீரென்று வெளியேறிய பிரபல நடிகை!! காரணம் இதுதானா??