Cinema

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’டாக்டர்’ படத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் ஹிட் சாங் ரிலீஸ்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. இந்தப் படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  புதுமுக நாயகி பிரியங்கா அருள் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தில் வினை யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

‘டாக்டர்’ படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து வருகின்றன. ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இந்தப்படத்தின் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சிவகார்த்திகேயன் எழுதிய ‘செல்லம்மா’ என்ற இந்தப்படத்தின் முதல் பாடலை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது. அந்தப் பாடலை அனிருத் பாடியிருந்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 இதைத்தொடர்ந்து ‘டாக்டர்’ படத்தில் இடம்பெற்ற  ‘நெஞ்சமே’ என்ற மெலடி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை மோகன் எழுதி அனிருத் பாடியுள்ளார்.

இந்தப் பாடல் முழுவதும் பிளாக் அண்ட் வொயிட் ஸ்கிரீனில் ஹீரோ ஹீரோயின் மட்டும் இடம் பெற்று, மனதை வருடும் அளவிற்கு மெல்லிய இசையில் அமைந்த இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து வருகிறது.

இந்த லாக்டோன் காலகட்டத்தில் டாக்டர் படத்தில் இரண்டு பாடல்களை வெளியிட்டு ரசிகர்களை படக்குழுவினர்  குதூகலபடுத்தி வருகின்றனர்

இஸ்ரோ தனியார்மயமாக்கப் படுகிறதா?

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் கையில் 10ஆயிரம் !!

Leave a Comment