பிள்ளையாரை வீட்டிலேயே முறையாக கரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

0
128

பிள்ளையாரை வீட்டிலேயே முறையாக கரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

கொரோனா காலகட்டத்தில் நாம் பிள்ளையார் சிலையை வைத்து ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் பிள்ளையார் சிலையை கரைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டில் சிலை வாங்கி வைத்துக் கொண்டாடும் பழக்கம் உடையவர்கள் வீட்டிலேயே முறைப்படி எவ்வாறு பிள்ளையாரைப் கரைக்க வேண்டும் என்பதனைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

விநாயகரை வழிபடும் முறையை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் https://bit.ly/2EeurRd

விநாயகர் சிலையை,ஒன்று அல்லது மூன்று அல்லது ஐந்து நாட்கள் பூஜை செய்து சிலையை கரைக்க நினைப்பவர்கள்,அவர்கள் வீட்டில் கிணறு போன்ற நீர்நிலைகளில் இருந்தால் கிணற்றில் கரைத்து விடலாம்.

கிணறு இல்லாதவர்கள்,ஒரு நிறை பக்கெட் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதில் சிறிதளவு மஞ்சள்தூள் போட வேண்டும்.
பின்னர் ஒரு ரூபாய் நாணயத்தை போட வேண்டும்.
அதன் பிறகு நீங்கள் கரைக்க நினைக்கும் பிள்ளையார் சிலையை எடுத்து வந்து தண்ணீரில் போடும்பொழுது இயற்கை நீர்நிலைகளில் சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதனையே உங்களுக்கான நீராக நினைத்து,எங்கள் குடும்பத்தை காத்தருள வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு பிள்ளையார் சிலையை அந்த தண்ணீரில் வைத்துவிடவேண்டும்.

பிறகு அதனை அப்படியே சிறிது நேரம் விட்டு விட வேண்டும்.கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் அவர் முழுவதுமாக கரைந்த பிறகு அந்த தண்ணீரை நாம் வீட்டில் தொட்டியில் வைத்திருக்கும் துளசி செடி அல்லது கால்மிதி போடாமல் இருக்கும் ஏதாவது ஒரு செடியின் அடியில் இந்த நீரை ஊற்றிவிட வேண்டும்.

Previous articleஅனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:! விநாயகரை வழிபடும் முறை மற்றும் நேரம்!
Next articleஇன்றைய ராசி பலன் 22.08.2020 Today Rasi Palan 22-08-2020