இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69039 பேருக்கு கொரோனா.. 56 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!!

0
134

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 69,039 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,973,368 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 55,928 பேர் கொரோனவால் பலியாகி உள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 953 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகி உள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 2,220,799 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் 6,96,641 நோயாளிகள் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பில் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் தான் முதலிடம் வகிக்கிறது. இதுவரை கொரோனா தொற்று காரணமாக 6,57,449 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 14,160 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 339 பேர் பலியாகி உள்ளனர். மேலும், கொரோனா தொற்று காரணமாக இதுவரை 21,698 பேர் பலியாகி உள்ளனர்.

Previous articleமுதல் நாள் ஆட்டத்தில் கிரவ்லி, பட்லர் ஜோடி அபாரம்
Next articleஇளைஞர்களை அலறவிடும் நடிகை சாக்ஸி!