தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
113

தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

கொரோனாவில் அனைத்தும் முடங்கி இருந்த நிலையில் தங்கத்தின் விலை மட்டும் உச்சத்தையே கண்டு வந்தது. அரை லட்சத்தை தாண்டி கொண்டிருந்த தங்கத்தின் விலையை கண்டு ஏழை மக்கள் பயந்து கொண்டிருந்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் குறைய தொடங்கிய போது இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

ஒரு வாரமாக குறைய தொடங்கிய தங்கம் இன்று ஏறி உள்ளது. இன்று கிராமிற்கு 17 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 136 ரூபாய் அதிகரித்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ரூ.5048-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.136 அதிகரித்து ரூ.40384-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 ரூபாய் அதிகரித்து ரூ.5300 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.136 அதிகரித்து ரூ.42400-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ. 0.80 குறைந்து ஒரு கிராம் 72.70-விற்க்கும், ஒரு கிலோ ரூ.72700 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் ஆட்டம் காட்டி ஏறத் தொடங்கியது தங்கம் விலை. ஆட்டம் காட்டி வரும் தங்கம் ஏழைகளுக்கு சிக்காமல் பறக்கும் பட்டாம்பூச்சியே.

 

 

 

 

Previous articleமரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை வெளிவிட காரணம் என்ன? எதற்காக?
Next articleபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்!