வைகோ எம்.பியானது இனிக்கிறது! அன்புமணி ராமதாஸ் எம்.பியானது கசக்கிறதா? தனியார் ஊடகத்தை வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி

0
178

வைகோ எம்.பியானது இனிக்கிறது! அன்புமணி ராமதாஸ் எம்.பியானது கசக்கிறதா? தனியார் ஊடகத்தை வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி

நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சார்பாக தலா 3 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மக்களவை தேர்தலில் அமைத்த கூட்டணி வாக்குறுதியின் படி திமுக சார்பாக வைகோவிற்கும்,அதிமுக சார்பில் அன்புமணி ராமதாசிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் வைகோவை தேர்ந்தெடுத்த செய்தியை நேர்மறையாகவும் அன்புமணி ராமதாஸை தேர்தெடுத்ததை எதிர்மறையாகவும் தமிழக ஊடகங்கள் காட்டி வருவதாக பாமகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர், பசுமை தாயகம் அருள் ரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து “சாதிவெறி விகடன் கும்பலின் ஊடக விபச்சாரம்: பாமக மீது பாய்ச்சல்! மதிமுகவுக்கு பூங்கொத்து!” என்ற தலைப்பில் முகநூல் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளதில் கூறியுள்ளதாவது.

விகடன் குழுமத்தில் பணியாற்றுவோரில், குறிப்பாக அங்கு செய்திகளை தீர்மானிப்பவர்களில் 50 விழுக்காட்டுக்கு மேல் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ‘புதிய பிராமணர்கள்’ ஆகும்.

தமிழக ஊடகங்களை இதற்கு முன்பு கட்டுப்பாட்டில் வைத்திருந்த பழைய பிராமணர்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களை எதிர்க்கும் வகையில் செய்திகளை வெளியிடுவார்கள். ஆனால், இப்போது பெரும்பான்மை தமிழ் ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புதிய பிராமணர்களின் ஒற்றை எதிரி வன்னியர்கள் ஆகும் (கூடவே, அவ்வப்போது இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் தாக்குவார்கள்).

விகடன் குழுமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊடகவியல் பணியில் சேர்ந்தவர்களில் 80% ஒரே சாதியினர் என்று கூறப்படுகிறது. அந்த குழுமத்திலிருந்து வெளியாகும், ஜூனியர் விகடன், ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களும், விகடன் டாட் காம் எனும் இணைய பத்திரிகையும் முழுக்க முழுக்க சாதிவெறி மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் வெளியாகும் செய்திகள் அனைத்திலும் சாதிவெறி விஷம் நீக்கமற நிறைந்திருக்கிறது.

“பாமக மீது பாய்ச்சல்! மதிமுகவுக்கு பூங்கொத்து!”

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக ஆதரவுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் (பாமக), திமுக ஆதரவுடன் வைகோ அவர்களும் (மதிமுக) வெற்றி பெற்றுள்ளார்கள். இதில் வைகோவின் வெற்றி இனிப்பான செய்தியாகவும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வெற்றி மிகவும் கசப்பான செய்தியாகவும் விகடன் கும்பலின் மனதை தாக்குகிறது! இது சாதிவெறி மனநோய் அல்லாமல் வேறு என்ன?

“வைகோவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா?” என்றும் “`ஒரு மணிநேரம் நடந்த விவாதம்’ – ராஜ்யசபா எம்.பி ஆகிறார் வைகோ!” என்றும் விகடன் கும்பல் வைகோவுக்காக எழுதிய கட்டுரைகளில், வைகோ வானளாவ புகழப்பட்டுள்ளார். ஆனால், “அன்று… ஜெயலலிதா தடுத்தார்! இன்று… எடப்பாடி கொடுத்தார்!” என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்த விகடன் கும்பல் கட்டுரையில் மட்டும் பாமகவும் மறுத்துவர் அய்யா அவர்களும் வறுத்து எடுக்கப்பட்டிருக்கிறார்கள்!

இப்படி வெறிபிடித்த நாய் போல பாமக மீது பாய்ந்து விழும் விகடன் கும்பல், மதிமுகவுக்கு மட்டும் பூங்கொத்து கொடுப்பது ஏன்?

வைகோ அவர்கள் தேர்வுக்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தேர்வுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இரண்டுமே தேர்தல் கூட்டணி உடன்பாட்டில் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்சிகளுமே தங்களது கூட்டணி கட்சிகளை முற்காலத்தில் விமர்சனம் செய்துள்ளன. இன்னும் சொல்லப்போனால், பாமக அதிமுகவை விமர்சனம் செய்ததை விட, மதிமுக திமுகவை விமர்சனம் செய்ததுதான் அதிகம். ஆனால், பாமகவின் விமர்சனங்களை மட்டுமே விரிவாக பதிவு செய்துள்ள விகடன் கும்பல், வைகோ அவர்களின் விமர்சனங்கள் எதையும் குறிப்பிடாமலேயே கட்டுரை தீட்டியுள்ளது.

தமது சாதிவெறி அரிப்புக்காக, பாமகவை இழிவாக விமர்சிக்கும் விகடன் கும்பல் ஒரு இதழியல் குழுமமே அல்ல. அது ஊடக தர்மத்தை படுகொலை செய்யும் ஊடக விபச்சார கும்பல் என்பதே உண்மை ஆகும்.

“விகடன் கும்பல் தனது பன்முகத்தன்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்”

விகடன் குழுமம் ஒற்றை சாதியின் ஆதிக்கத்தில் இருப்பது ஜனநாயத்திற்கு பேராபத்து. விகடனின் சாதிவெறி தொடர் பிரச்சாரத்தால் தமிழ்நாட்டின் நல்லிணக்கமும், அமைதியும் பாதிக்கப்படும். இந்த ஆபத்தை தடுக்க – விகடன் குழுமம் தமது ஊடகத்தில் செய்திகளை உருவாக்கும் படிநிலைகளில் (ஆசிரியர் குழு, செய்தியாளர்கள் வாரியாக) தமிழ்நாட்டின் எந்த சமூகத்தினர் எத்தனை விழுக்காட்டினர் பணியாற்றுகிறார்கள் என்பதை வெளியிட வேண்டும்.

2018 மே மாதம் 3 ஆம் நாள் கானா நாட்டின் அக்ரா நகரில் கூடிய ஐநாவின் யுனெஸ்கோ ஊடகங்கள் மாநாட்டில், ‘அக்ரா பிரகடனம்’ (Accra Declaration) எனும் அறிவிப்பை வெளியிட்டார்கள். அந்த யுனெஸ்கோ பிரகடனத்தில் “ஊடகங்களில் பன்முகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, சமூகத்தில் அங்கம் வகிக்கும் எல்லா பிரிவினரும் ஊடகங்களிலும் இடம்பெற வேண்டும் (fair representation in the media of different groups in society)” என்று கூறப்பட்டுள்ளது.

Accra Declaration: UNESCO World Press Freedom Day International Conference.- “We therefore: Call on each UNESCO Member State to:… Promote media diversity, including by preventing excessive concentration of media ownership, by requiring media outlets to be transparent about their ownership, …by promoting fair representation in the media of different groups in society.”

அந்த வகையில் விகடன் குழுமத்தில் படிநிலை பணிகள் வாரியாக FC, BC, MBC, SC, ST, தமிழ் மொழி பேசுவோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவினரும் எத்தனை விழுக்காட்டினர் வேலை செய்கிறார்கள் என்பதை, பணி படிநிலை வாரியாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இது விகடன் குழுமம் என்கிற ஒரு நிறுவனத்தின் சிக்கல் அல்ல. இது தமிழ்நாட்டை பீடிக்கும் பேராபத்து. எனவே, “விகடன் கும்பல் தனது பன்முகத்தனமையை வெளிப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தும் கடமை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் உள்ளது என்றும் அந்த பதிவில் அவர் கூறியுள்ளார் .

இதையும் படிக்கலாம்: எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்

Previous articleதமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!
Next articleஎம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்